SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வத்திராயிருப்பு அருகே 2 கிராமங்களில் ஜல்லிக்கட்டு தள்ளிவைப்பு

2018-01-20@ 01:19:02

வத்திராயிருப்பு :விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தில் இன்றும், சேதுநாராயணபுரத்தில் நாளை மறுநாளும் (ஜன.22) ஜல்லிக்கட்டு நடக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையொட்டி 2 ஊர்களிலும் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த சில ஆண்டுகளாக 2 கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென விழாக்கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நெடுங்குளத்தில் இன்றும், சேதுநாராயணபுரத்தில் நாளை மறுநாளும் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2 ஊர்களிலும் கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடந்த நிலையில், தற்போது புதிதாக ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் கேட்பதாக, கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X