SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்டர்நெட் சேவையும் தர வேண்டும் விமானத்தில் பயணிகள் போனில் பேசும் வசதியை வழங்க டிராய் பரிந்துரை

2018-01-20@ 00:31:59

புதுடெல்லி : பயணிகளுக்கு மொபைல் போன் சேவையை விமானத்தில் வழங்க அனுமதி வழங்க வேண்டும் என டிராய் பரிந்துரை செய்துள்ளது. மொபைல் போன்களை விமானங்களில் பயன்படுத்த தற்போது அனுமதி கிடையாது. மொபைல் சிக்னல்கள் விமான சிக்னல்களுக்கு இடையூறாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் இருக்கலாம் என்பதால் இந்த தடை உள்ளது. இந்நிலையில், மொபைல் போன்களை விமானத்தில் செல்லும் பயணிகள் பயன்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், இதற்கான அனுமதியை வழங்கலாம் எனவும் விமான போக்குவரத்து துறைக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது. மொபைல் போன் சேவையை விமானங்களில் அளிப்பது தொடர்பான கருத்துக்களை கேட்டு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) தொலைத்தொடர்பு துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடிதம் அனுப்பியிருந்தது. இதில் குரல் சேவை, வீடியோ அழைப்புகள் மற்றும் இணைய அழைப்புகளை இந்திய எல்லையில் பறக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் அளிப்பது தொடர்பாக கருத்து கேட்டிருந்தது. இதன் அடிப்படையில் டிராய் இந்த பரிந்துரையை தற்போது அனுப்பியுள்ளது.

தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மொபைல் போன்களை விமானத்தில் பயன்படுத்துவதற்கு வகை செய்ய வேண்டும். விமான கேபினில் உள்ள அலைவரிசையை சர்வதே தரத்தில் அமைத்து, மொபைல் சிக்னல்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ய வேண்டும். இதுேபால், விமான மோடில் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளை வைபை மூலம் இணைத்து விமான அறிவிப்புகள் மற்றும் டாக்சி சேவையை பெற வசதி ஏற்படுத்தலாம். அதேநேரத்தில், விமானத்தில் இணைய சேவை வழங்குவதற்கான விதிகளை மீறாத வகையில் இருக்க வேண்டும். இதுபோல் சாட்டிலைட் வசதி மூலமாகவும் மொபைல் சேவையை அளிக்கலாம். இந்திய வான் எல்லையில் பறக்கும் விமானங்களில் பயன்படுத்தும் இணைய சேவையை சட்ட ரீதியாக கண்காணிக்கும் அமைப்பும் அவசியம் என கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X