SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிபிஐ மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: பீகார் மாஜி முதல்வர் ராப்ரி பேச்சு

2017-11-22@ 21:45:44

பாட்னா: சிபிஐ மற்றும அமலாக்கத்துறை மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் என பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி கூறியுள்ளார்.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராப்ரிதேவியை ரூ.1,000 கோடி பினாமி சொத்து தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி டெல்லி அமலாக்கத்துறை அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது மகன் தேஜஸ்விக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டு முறை அவர் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் பாட்னா நகரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அதில்  ராப்ரிதேவி பேசியதாவது:

அமலாக்கத் துறையாக இருந்தாலும் சரி, சி.பி.ஐ. அல்லது வருமான வரித்துறையாக இருந்தாலும் சரி அவர்களுடைய குணம் எனக்குத் தெரியும். நாங்கள் என்ன தவறு செய்தோம். இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பதில் சொல்லவேண்டும். என்னை ஆஜராகும்படிகூறி எனக்கு எத்தனையோ நோட்டீஸ்கள் வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் பயப்படமாட்டேன். பணிந்துவிடவும் மாட்டேன். அவர்கள் விசாரணை நடத்தவேண்டும் என்று விரும்பினால் பாட்னா நகருக்கு வந்து என்னிடம் கேள்வி கேட்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்