SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை அருகே பெண் தகராறில் நடந்த பயங்கரம் கஞ்சா வியாபாரி கழுத்தறுத்து கொலை: பிடிக்க முயன்றவரை கடித்து விட்டு தப்பிய பெண் உட்பட 3 பேருக்கு வலை

2017-10-24@ 00:43:22

சூலூர்: கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் குளத்தூர்தட்டான் தோட்டத்தில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பில் 50க்கும் மேற்பட்டோர் தங்கி  வெவ்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்த கரிகாலன்,  ஹரீஸ், மதுரை மேலஅரசடிைய சேர்ந்த சேதுராமன் ஆகிய 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி, வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.   இவர்களுடன் கரிகாலன் மனைவி எனக்கூறி கடந்த 4 நாளுக்கு முன் 20 வயது இளம்பெண் ஒருவரும் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம்  இரவு வீட்டில் அனைவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர்.

போதையில், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதில் 3 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கரிகாலன், ஹரீஸ் இருவரும்  சேர்ந்து அரிவாளால் சேதுராமனை தலை, வாய் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் பிணமானார்.   உடனே  சடலத்தை போர்வையால் மூட்டை கட்டி வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கரிகாலன், ஹரீஸ் இருவரும் பெண்ணுடன் வாசலில் அமர்ந்து கொண்டனர்.  சத்தம் கேட்டு அங்கு வந்த வீட்டு உரிமையாளர் சுகுமார், அவரது மனைவி சாந்தி, அக்கம் பக்கத்தினர் வீட்டை திறக்குமாறு சத்தமிட்டுள்ளனர்.  அப்போது அந்த பெண்ணை பிடிக்க முயன்ற சாந்தியின் கையை கடித்து விட்டு அவர்  ஓட்டமெடுத்தார்.  

பின்னர் கரிகாலன் அரிவாளை காட்டி மிரட்டி பைக்கை எடுத்துக் கொண்டு  ஹரீசையும், அந்த பெண்ணையும் ஏற்றிக்கொண்டு  தப்பினார். தகவலறிந்து  சூலூர் போலீசார் வீட்டில் போர்வையில் மூட்டை கட்டி வைத்திருந்த சடலம் மற்றும் 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.  ெகாலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கரிகாலன் ஏற்கனவே  இரண்டு முறை குண்டாசில் அடைக்கப்பட்டவர். அவர் மீது 16 வழக்குகள் உள்ளன. இதே போல், சேதுராமன், ஹரீஸ் மீதும் 10க்கும் மேற்பட்ட கஞ்சா  வழக்குகள் உள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்