SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குங்ஃபூ பாட்டி

2017-05-18@ 15:14:25

நன்றி குங்குமம் தோழி

40 வயதிலேயே வீட்டு வேலைகளை செய்து முடிப்பதற்குள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குபவர்கள் இருக்க, 93 வயதில் குங்ஃபூ கற்றுத் தருகிறார் சீனாவின் டாங்கியூவன் கிராமத்தைச் சேர்ந்த ஷாங் ஹெக்ஸையன். 90 வயதில் திடகாத்திரமாக இருக்கும் பாட்டிகள் டிவி சீரியல்கள் பார்ப்பார்கள். மிஞ்சிப்போனால் பரமபதம் விளையாடுவார்கள். பேரன், பேத்திகளைக் கொஞ்சுவார்கள். ஆனால் இந்த ஸ்டீரியோ டைப் பாட்டிகளுக்கு மாற்றாக இந்த 93 வயதில் கம்பு சுத்தி விளையாடுகிறார் ஷாங்.4 வயதில் குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்ட இவர், கடந்த 89 ஆண்டுகளாக விடாமல் பயிற்சி செய்து வருகிறார். இப்போதும் வீட்டில் தனது பிள்ளையுடனும் பேத்திகளுடனும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு குங்ஃபூ கற்றுத்தருகிறார். வியக்க வைக்கும் இந்த திறமையால் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஷாங் ஹெக்ஸையன். இவர் பயிற்சி செய்யும்  போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலான பிறகு சைனாவின் இன்டர்நெட் சென்சேஷனே இவர்தான்.
 
இவரது பிஸ்ட் டெக்னிக் அந்த ஊரில் ரொம்ப பிரபலம். அதாவது, கொம்பினை வைத்து தாக்குதல், உள்ளங்கை மற்றும் கால்களால்  தாக்குவதில் இவர் மிகப் புகழ் பெற்றவர். 93 வயதிலும் நல்ல உடல்  ஆரோக்கியத்தோடு இருக்கும் ஷாங் தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து  உடற்பயிற்சி செய்த பிறகு குங்ஃபூ பயிற்சியில் ஈடுபடுகிறார்.நல்ல தூக்கம்,  முறையான நிறைந்த காய்கறிகளுடன் கூடிய சிறந்த உணவுப் பழக்கம் இவைதான் இவர் ஆரோக்கியமாக இருக்க முக்கியக் காரணம். இந்த சிறந்த பழக்க வழக்கங்கள்  மற்றும் பயிற்சி களினாலோ என்னவோ இந்த 93 வயது வரை அவர் உடல்நலம் சரியில்லை  என மருத்துவமனைக்கு சென்றதே இல்லையாம். இதுவே பெரும் சாதனை தானே. ‘நல்ல உடல்நலம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சிகள் செய்வதோடு நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுவதும் முக்கியம்’ என்பது இளைய தலைமுறைக்கு இவர்  சொல்லும் அறிவுரை. ‘‘இந்த குங்ஃபூ கலையில் 15 ஸ்டைல் இருக்கிறது. ஒவ்வொரு ஸ்டைலுக்கும் 36 மூவ்ஸ் உண்டு. ஒரு ஸ்டைலை முழுமையாக கற்றுக்கொள்ளவே முழுதாக மூன்று ஆண்டுகள் பிடிக்கும்” என்கிறார் ஷாங். ‘‘கடினமான இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது எனது தசைகளை ரணமாக்கி  இருக்கிறது.அதனால் என்னால் சில நேரங்களில் கழிப்பறைக்குக் கூட செல்ல முடியாமல் இருந்திருக்கிறது. எங்கள் குடும்பம் மிக வறுமையான குடும்பம். பல நேரங்களில் பயிற்சிக்கு பின் எனக்கு சாப்பிட உணவில்லாமல் பட்டினியோடு இருந்திருக்கிறேன்” என்கிறார். ஷாங் ஒருநாள் தெருவில் சென்று  கொண்டிருக்கும் போது, ஒருவன் தன் மனைவியை போட்டு அடித்துக்கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறார்.

இவருக்கு வந்த கோபத்தில் அங்கே விரைந்து சென்று அவனை போய்  நெஞ்சில் ஓங்கி அடித்திருக்கிறார். அத்துடன் அவன் தன் மனைவியை அடிப்பதை  நிறுத்தி இருக்கிறான். அப்போதுதான் அவரின் கோபம் தணிந்திருக்கிறது ஆனால் ஷாங் தனது இந்த குங்ஃபூ கலையை எப்போதும் வன்முறைக்குப் பயன்படுத்த  விரும்புவதில்லை. தற்காப்புக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்று விரும்புகிறார்.

‘1924 ம் ஆண்டு நான் பிறந்தபோது சைனா பிற நாடுகளுடன்  போரில் ஈடுபட்டு இருந்தது. அப்போது இந்தக்கலையைக் கற்றுக் கொள்வது மிகவும்  அத்தியாவசியமாக இருந்தது. அதுமட்டுமின்றி 300 ஆண்டுகளாக குங்ஃபூ கற்றுக்கொள்ளும் வழக்கம் எங்கள் பாரம்பரியத்தில் நீடித்து வருகிறது. எங்கள்  குடும்பத்தில் அனைவரும் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு வருகிறோம்.இது எங்களுக்கு நல்லொழுக்கத்தையும், வலிமையையும் அளிக்கிறது. நமது முன்னோர்கள் இந்தக் கலையை தோற்றுவிக்க காரணம் தற்காப்புக்காகவும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும்தான். மற்றவர்களை கொடுமைப்படுத்துவதற்காக அல்ல’ என்கிறார் ஹாங். இவரது பாரம்பரியத்தைச் சேர்ந்த சிலர் அந்த ஊரை விட்டு சென்றுவிட்டதால் ஊரில் உள்ள மற்ற பிள்ளைகளுக்கு குங்ஃபூ பயிற்றுவிக்கும் இவர், ‘நான் பிரபலமாக இருப்பது பற்றி எப்போதும் நினைப்பதில்லை.குங்ஃபூ கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு எங்கள் குடும்பம் கட்டாயம் குங்ஃபூ கற்றுக்கொடுக்கும். என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு கற்றுத் தருகிறேனே தவிர உலகம் முழுதும் நான் பிரபலமாவேன்’ என நினைக்கவில்லை’ என்கிறார். இதுமட்டுமல்லாமல் ஷாங் இந்த வயதில் அந்த ஊர் பிள்ளைகளுக்கு கைவினைப்பொருட்களை செய்யும் முறைகளையும் பயிற்றுவிக்கிறார்.

-ஸ்ரீதேவி மோகன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • WorldPressPhoto2018

  உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

 • PeruBUsCrash44dead

  பெரு நாட்டில் 300 அடி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி

 • Amritsarpm

  அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் குடும்பத்துடன் வழிபாடு

 • 22-02-2018

  22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • GodofWealth

  சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X