SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இசைக் குயில்

2017-04-20@ 14:43:55

நன்றி குங்குமம் தோழி

ஷீத்தல் சாத்தே மஹாராஷ்ட்ராவில் செயல்படும் “கபீர்கலா மஞ்ச்” என்ற அமைப்பின் கம்பீரப் பாடகர். மனித உரிமை பிரச்சனைகள், நாட்டில் நிலவும் சுரண்டலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு, இசை மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்ப்பியக்கமாக செயல்படும் குழு கபீர்கலா மஞ்ச். இதில் ஷீத்தல் மற்றும் இவரின் கணவர் சச்சின் மாலி உறுப்பினர்களாய் செயல்பட்டனர். சாதி அடிப்படையிலான பாகுபாடு, சாதிய வன்முறை  மற்றும் தலித் உரிமைகளுக்காக தனது கம்பீரம் நிறைந்த குரலால் இயக்க மேடைகளில் ஏறி பாடல்களை தொடர்ந்து இசைத்து, தன் எதிர்ப்பை பதிவு செய்த வீரம் நிறைந்த செயல்பாட்டாளர். தலித்துகளுக்கு மட்டுமல்லாது பாட்டாளிகளுக்கும் கபீர்கலா மஞ்ச் கலைக்குழு நம்பிக்கை அளித்து விழிப்புணர்வையும் வழங்கி வந்தது.

ஆனால் அந்த இயக்கம் புரட்சிகர பாடல்களை பாடுவதாகக் கூறி கலைக்குழுவை தடை செய்து, இக்குழுவைச் சேர்ந்த சிலரை மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. தனது பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் சமூக அவலங்களை மக்களிடம் எடுத்துச் சென்ற ஷீத்தல் சாத்தே மற்றும் அவரின் கணவரையும் அரசு சிறையிலடைத்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மக்களின் சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்களின் வடிவங்களில், ஆட்டமும் பாட்டும் அரசை எப்படி எல்லாம் பயமுறுத்துகிறது என்பதற்கு, ஷீத்தல் சாத்தேயின் பாடல்களும் அவரின் கணீர் குரலும் ஓர் உதாரணம்.

-மகேஸ்வரி

low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

 • porattam_arasu_11

  அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்