மகளிர் உலகம்

2018-01-11@ 14:50:28

நன்றி குங்குமம் தோழி
பெண்களுக்கு கடுமையான சட்டங்கள் இருந்து வந்த சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் மீது காட்டப்பட்ட இறுக்கமான சட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து வருகின்றன. பெண்களுக்கு உரிமை வழங்குவதில் அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்க முடிவு செய்து அதற்கான ஆணையும் வெளியிட்டது. கடந்த ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது வரும் 2018ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பார்வையாளர்களாக பெண்களை அனுமதிக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. விஷன் 2030 என்ற திட்டத்தையும் உருவாக்கி அதில் பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பெண்ணுரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றது.
ரஷ்யாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்த சைபீரியன் புலி ஒன்று உணவு வழங்கிய பெண் காப்பாளர் மீது பாய்ந்து தாக்கிய சம்பவம் ஊடகங்களில் வைரலானது. சைபீரியன் புலி ஒன்றிற்கு உணவு வழங்க பெண் காப்பாளர் ஒருவர் அது அடைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த புலி அவர் மீது பாய்ந்து அவரை மறைவிடத்திற்கு தரதரவென இழுத்து சென்றது.
இதைக் கண்ட பொது மக்கள் கூச்சல் எழுப்பியும், அருகில் இருந்த பொருட்களை புலியின் மீது வீசியும் பெண் காப்பாளரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மிரட்சி அடைந்த புலி காப்பாளரை விட்டு சென்றது. உடன் துரிதமாக செயல்பட்டு மீட்ட சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தின்றி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் தாயை இழந்த இரு சிங்கக் குட்டிகளை தத்து் எடுத்து வளர்த்து வந்தார். வனத்துறைக்கு இது தெரியவரவே சிங்கக் குட்டிகளை கைப்பற்றி சரணாலயத்தில் ஒப்படைத்து விட்டனர். இந்நிலையில் ஏழு வருடங்கள் கழித்து அந்தப் பெண் சரணாலயம் சென்று அந்த சிங்கக் குட்டிகளை பெயர் சொல்லி அழைத்ததும் சிங்கங்கள் இரண்டும் பாசத்துடன் அவரை நோக்கி ஓடி வந்து அவர் மீது தாவி ஏறி கட்டியணைத்து மாறி மாறிப் பாசத்தை பொழியும் காட்சி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் காட்சி காணொளியாக ஊடகங்களில் வெளியாகி வைரலானதுடன் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
Tags:
The world of womenமேலும் செய்திகள்
வாழ்க்கை வாழ்வதற்கே
வானவில் சந்தை
MUSEUM OF SELFIES
குரல்கள் - திருமணத்துக்குப் பிறகு சுதந்திரத்தை இழக்கிறீர்களா?
பணியிடங்களில் பாலியல் தொல்லையா?
மதங்கள் பெண்களை ஒடுக்குகின்றனவா ?
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
LatestNews
பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14:09
ஜெ. ரத்த மாதிரிகள் உள்ளதா என நாளைக்குள் பதிலளிக்க அப்பல்லோவுக்கு ஐகோர்ட் கெடு
13:43
டிடிவி தினகரன்-திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம்: அமைச்சர் ஜெயக்குமார்
13:06
தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்: வானிலை ஆய்வு மையம் அறிவுரை
12:50
ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12:43
கருணாநிதியை சந்திக்க விடாமல் மு.க.ஸ்டாலின் தடுத்தார் என்ற புகாரை மக்கள் ஏற்கமாட்டார்கள்: ஐ.லியோனி
12:41