SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செய்து பாருங்கள்

2017-12-07@ 14:43:52

நன்றி குங்குமம் தோழி

Do It Yourself என்பதன் சுருக்கமே DIY (தமிழில் டை). தமிழில் வரும் முதல் டை இதழ் என்ற பெருமையுடன் வெளிவர துவங்கியிருக்கிறது ‘செய்து பாருங்கள்’ இதழ். ‘‘நாம் இப்போது தொழில்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழில்நுட்பத்தோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ள எண்ணி முயன்று பார்க்கும் குழந்தைகள் மனம், தொழில்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது.

பெற்றோர்களோ குழந்தைகளை எப்போதும்  படி படி என நச்சரிப்பதும், விளையாடவோ, அவர்கள் பொழுதை பயனுள்ளதாய் அவர்கள் மாற்றிக்கொள்ள சொல்லித் தந்திருக்கிறோமா? ஒரு பொருளை உருவாக்கிப் பார்க்கும் ஆவலை அவர்களிடத்தில் தூண்டியிருக்கிறோமா? தொலைக்காட்சியின் முன் மணிக்கணக்காய் நிலைத்து, தேவையில்லாத மனச்சிக்கலை உருவாக்கிக்கொள்ளும் பெரியவர்களுக்காகவும் குழந்தைகளின் கற்பனைத் திறனை, படைப்பாற்றலை தூண்டவும் எடுத்திருக்கும் சிறு முயற்சியே ‘செய்து பாருங்கள்’ இதழ்'' என்கிறார் இந்த இதழை நடத்தும் மு.வி. நந்தினி.

பெண்களுக்கான ஃபேஷன் ஜூவல்லரியில் துவங்கி, டெரகோட்டா வேலைப்பாடுகள், சில்க் த்ரெட் வேலைப்பாடுகள், குழந்தைகளுக்கு பிறந்தநாள் பேனர் தயாரிப்பு, பிறந்தநாள் கோன் கேப், பாம் பாம் பால்ஸ், ஒரிகாமி பறவை கள், ஐஸ் குச்சியில் டைனோசர் என அத்தனையும் அசத்தல் ரகம். மேலும், சிறுதானிய உணவு செய்முறை, வீட்டிற்குள் பரவி யிருக்கும் வேதிப்பொருட்களை உறிஞ்சி சுத்தமான காற்றை வெளியிடும் செடிகள் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் போன்றவை இதில் இடம் பெறுகின்றன.

- மகேஸ்வரி

Tags:

Look at it
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2017

  12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்