SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Queen Of The Dark

2017-10-12@ 15:16:07

நன்றி குங்குமம் தோழி

குறுகிய காலத்தில் மாடலிங் துறைக்குள் நுழைந்து தனக்கென தனி பாதையை உருவாக்கி  குயின் ஆஃப் தி டார்க் என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார் தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த நயாகிம் காட்வெச். 24 வயதான இவர் எத்தியோப்பியாவிலும், கென்யாவிலும் தன்னுடைய  இரு தங்கைகளுடன் அகதிகள் முகாமில் அகதியாக  வாழ்ந்து வந்தார். பல இன்னல்களை கடந்து வாழ்ந்துவந்த இவர் இங்குதான் தன்னுடைய இரு தங்கைகளை இழந்தார்.

அந்த சோக சம்பவத்தில் இருந்து விடுபட அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் இருந்தபோது எந்த ஒரு  பாகுபாடும் அவர் உணரவில்லை. ஆனால் கல்வி பயில அமெரிக்கா வந்த போதுதான் நிறப் பாகுபாடு பார்ப்பது தெரிய வந்திருக்கிறது. அங்கு பயின்ற பலர் இவரை கேலி, கிண்டல் செய்து வித்தியாசமாகப் பார்த்துள்ளனர். தன்னுடைய இந்த நிறம்தான் தன்னை பெரும்பான்மையான மக்களிடமிருந்து விலக்கி  வித்தியாசமாக காட்டுகிறது என்பதை உணர்ந்தவர் அதையே தன்னுடைய பலமாக மாற்றிக் கொண்டார்.

அந்த கருப்பு நிறத்தைக் கொண்டு  தனக்கு முன் இந்த துறைக்கு வந்த பலரையும் அவர் பின்னுக்கு தள்ளி சாதித்துள்ளார். இது குறித்து நயாகிம் காட்வெச்  கூறுகையில், “முன்பின் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் தன்னைப் பார்த்து ‘நீங்கள் ஏன் மாடலிங் துறையைத் தெரிவு செய்யக் கூடாது என்று கேட்டார்’ அதன் பின்னரே மாடலிங் பற்றி சிந்திக்க தொடங்கினேன். என்னுடைய புகைப்படங்களைப் பார்த்து யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை.

நான் என்னை விரும்புகிறேன், என் கருப்பு நிறத் தோலை விரும்புகிறேன், கருப்புத்தான் என்றும் அழகு என்றவர் பட்டப் படிப்பை முடித்துவிட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று தன் கருத்தைப் பதிவு செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இவரின் புகைப்படங்களுக்கும் நேர்மையான பதிவிற்கும் இவரின் ரசிகர்கள் ‘குயின் ஆஃப் தி டார்க்’ என்கிற பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். தற்போது நயாகிம் காட்வெச்-ஐ இன்ஸ்ட்ராகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் கடந்து சக மாடலிங் போட்டியாளர்களை அலற வைத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sibiraj_giftsss11

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

 • halloween_12311

  நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

 • terror_12_delli

  டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

 • aalosnai_122

  இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

 • swiss_123_landdd

  அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்