SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹீரோயின்ஸ் ஃபிட்னஸ்

2017-09-12@ 15:14:32

நன்றி குங்குமம் தோழி


கலர்ஃபுல் ஹீரோயின்களின் பியூட்டி & ஃபிட்னஸ் ரகசியங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும் கட்டுக்கோப்பு மட்டும் குலைவதில்லை! அந்த  வகையில் மலைக்க வைக்கும் சிலரது ஃபிட்னஸ் ஒர்க் அவுட் சீக்ரெட்ஸ் இதோ...

ஸ்ருதிஹாசன்

கடினமான ஒர்க் அவுட்களை சில நேரங்களில் மேற்கொள்ளும் ஸ்ருதிஹாசன், தினமும் ட்ரெட்மில்லில் ஓடுகிறார். பின் லைட்டான கார்டியோ  பயிற்சிகள். ஆனாலும் வியர்க்க விறுவிறுக்க டான்ஸ் ப்ராக்டீஸ் செய்வதுதான் சிறந்த எக்ஸர்சைஸ் என்கிறார் கெத்தாக.

காஜல் அகர்வால்

காற்றோட்டமான இடத்தில் யோகாவுடன் அன்றைய நாளைத் தொடங்கும் காஜல் அகர்வால், அதன் பிறகு ஜிம் ஒர்க் அவுட் செய்த பிறகே வெளியே  கிளம்புகிறார். ‘‘Yoga is the journey of self, through the self, to the self!’’ என்பது இவரது வேதவாக்கு.

கங்கனா ரணாவத்

தினமும் 45 நிமிடங்கள் யோகா கட்டாயம் என்ற கொள்கையை வைத்திருக்கிறார் பாலிவுட் குயின் கங்கனா ரணாவத். அவரது ஃபிட்னஸ் ட்ரெயினர்  லீனா மோக்ரெயின் வழிகாட்டுதல்படி வாரத்தில் ஐந்து நாட்கள் ஜிம்மிற்கு செல்கிறார். இன்டர்வெல் டிரெயினிங், கார்டியோ ஒர்க் அவுட்ஸ், புல்அப்ஸ்,  புஷ்அப்ஸ், ஸ்ட்ரெங்க்த் டிரெயினிங் என வகையாய் பிரித்து ஒவ்வொரு நாளும் பார்ட் பார்ட்டாக ஒர்க் அவுட் செய்கிறார்.

ஸ்ரேயா

தினமும் இரண்டு விதமான யோகாவை கடைப்பிடிக்கிறார் ஸ்ரேயா. போலவே இரு வேளையும் தலா 45 நிமிடங்கள் என ஜிம்மில் செலவிடுகிறார்.  வாரத்தில் இரு நாட்கள் டான்ஸ் + நீச்சல் ப்ராக்டீஸ் கட்டாயம்.

மந்த்ராபேடி

சிக்ஸ்பேக் வைத்த ஹீரோயின்களில் மந்த்ராபேடியும் ஒருவர். குழந்தை பெற்ற பிறகும் உடலை ஃபிட் ஆக வைத்திருப்பவர். ‘‘சரியான நேரத்தில்  சரியான உணவுகளை சாப்பிட்டால் உடல் மெருகேறும். Exercise is my greatest stress buster’’ என்கிறார் இருபது கிலோ  தம்பிள்சை கையில் ஏந்தியபடி!

சோனாக்‌ஷி சின்ஹா

சோனாக்‌ஷி சின்ஹாவின் ஃபிட்னஸில் முதலிடம் வகிப்பது நீச்சல். உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு உடற்பயிற்சியை மேற்கொள்வது  இவரது ஃபிட்னஸ் சீக்ரெட்!

அடா ஷர்மா

‘இது நம்ம ஆளு’வில் ‘மாமன் வெயிட்டிங்...’ பாடலில் குத்தாட்டம் போட்டவர் டோலிவுட் ஸ்லிம் பியூட்டி அடா ஷர்மா. யோகா, ஜிம்னாஸ்டிக் என  பிச்சு உதறும் அடா, நல்ல தூக்கமும் உடற்பயிற்சிதான் என்கிறார்!

ரகுல் ப்ரீத் சிங்

ஸ்போர்ட்ஸ் சாம்பியன், ஹார்ஸ் ரைடிங், கோல்ஃப் பிளேயர் என எகிறும் திசையெல்லாம் ஃபிட்னஸ் காட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங். வாரத்தில் ஆறு  நாட்கள் கட்டாயம் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்பது இவருக்கு இவரே விதித்துக் கொண்ட விதி!

தீபீகா படுகோனே

பேட்மின்டனில் ஸ்டேட் லெவல் ப்ளேயராக இருந்தவர் தீபீகா படுகோனே. அதனாலேயே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர்.  ‘I do regular exercise, yoga, eat healthy and positive thinking is what makes me look good’ என  கண்சிமிட்டுபவர், தனது ஃபிட்னஸ் டிரெயினர் யாஸ்மின் வழிகாட்டுதல்படி, இப்போது pilates, stretching உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  வருகிறார்.

அதிதி ராவ் ஹைதரி

மணிரத்னத்தின் கண்டுபிடிப்பான அதிதி ராவ் ஹைதரி, பிகினி காஸ்ட்யூமுக்கு ஏற்ப உடலை பராமரிப்பவர். ‘ஐ லவ் யோகா & டான்ஸிங்...’ என  சிலிர்க்கும் இவர், ஐந்து வயதிலிருந்து டான்ஸ் ஆடுகிறாராம். இது போதாது என்று களரியிலும் என்ஸ்பர்ட்டாம்!

ப்ரியங்கா சோப்ரா

தினமும் காலை ட்ரெட் மில்லில் பதினைந்து நிமிட நடை பயிற்சி, கொஞ்சம் யோகாவுடன் அன்றைய நாளைத் தொடக்கும் ப்ரியங்கா சோப்ரா, அதன்  பிறகு 20 - 25 பென்ச் ஜம்ப்ஸ், ரிவர்ஸ் க்ரன்சஸ், லைட் வெயிட்ஸ், ஓவர் வெயிட்டிங் என கடுமையான பயிற்சிகளை மேற் கொள்கிறார்.  இடையிடையே நீச்சல் பயிற்சியும் டான்ஸ் ப்ராக்டீஸும் உண்டு.

பூஜா ஹெக்டே

பாக்ஸிங், பைலேட்ஸ், ஏரியல் சில்க், வெயிட் டிரெயினிங், தலைகீழாக ஒர்க் செய்வது என நிஜமாகவே கடும் ‘ஜிம்’மாளி பொண்ணு பூஜா ஹெக்டே.  அதனாலேயே ‘ஜிம் சாம்பியன்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

ராகினி திரிவேதி

கடுமையான உடற்பயிற்சியின் மூலம் கணிசமாக உடல் எடையை குறைத்துள்ள ‘நிமிர்ந்து நில்’ ராகினி திரிவேதி, இப்போது ஜிம் லவ்வர். வீட்டில்  மினி ஜிம் வைத்திருக்கிறார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupatibrammorchavam2017

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 • NIRMALASitharaman

  டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

 • sachinswach

  தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

 • RAHULGANDHI

  குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

 • madurainavarathiri

  நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்