கார்ட்டூன்...கார்ட்டூன்...

2017-06-16@ 15:26:37

நன்றி குங்குமம் தோழி
விடுமுறை நாட்கள் என்றாலே ஒவ்வொரு வீட்டிலும் குட்்டீஸ்களின் அரட்டைகளுக்கு அளவே இருக்காது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு நேரத்தை செலவிட உதவுவது டிவிதான். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த மாதம் டிவி பார்ப்பதற்கு விடுமுறைதான். அவர்களிடம் இருந்து டிவி ரிமோட்டை வாங்குவதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருக்கும்.
எத்தனை புதிய டிவி சேனல்கள் வந்தாலும் கார்ட்டூன் சேனல்களின் மவுசு மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிகழ்ச்சி சுட்டீஸ்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குட்டீஸ்கள் மட்டுமின்றி இளம் வயதினரையும் கவர்ந்துள்ள நிகழ்ச்சிகள் ஏராளம். சுட்டி டிவியில் ஒளிபரப்பப்படும் ஜாக்கிச்சான், டோரா புஜ்ஜி, சாகச நிகழ்ச்சிகளை தொடர்ந்து அட்வென்ச்சர் தொடர்களும் இடம் பெற்று இருக்கின்றன.
‘வருத்தப்படாத கரடி சங்கம்’ என்ற சுட்டி டிவி தொடரில், காட்டை அழிக்க நினைக்கும் ஒருவரிடமிருந்து காட்டை காப்பாற்ற இரண்டு கரடிகள் செய்யும் சேட்டைகள் குழந்தைகளை உற்சாகமடைய செய்கிறது. ‘டிராகன் பூஸ்டர்’, ‘அட்வென்ச்சர் ஆஃப் ஸ்பைடர் மேன்’, ‘சோட்டா பீம்’ போன்ற தொடர்களை வாண்டுகள் மிஸ் பண்ணுவதே கிடையாது.
இது போலவே கார்ட்டூன் தொடர்கள் குழந்தைகளை சோர்வடையாமல் வைத்திருக்கின்றன. ‘டோரி மோன்’, ‘நின்ஜா ஹட்டோரி’, ‘மோட்டு பட்டுலு’, ‘சிவா’ போன்ற கார்ட்டூன் தொடர்கள் சம்மர் ஸ்பெஷல் எபிசோடாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய வாலு பசங்களை போலவே பெற்றோர்களை வாட்டி எடுக்கும் சேட்டைப் பையனாக வரும் ‘சின் சான்’ நிகழ்ச்சியை குட்டீஸ்கள் மறந்தும் கூட தவற விடுவது இல்லை.
இன்று பல சுட்டிப் பையன்களுடைய பேச்சின் மாடுலேஷனே ‘சின் சான்’ போலத்தான். ‘டிவில வர்ற அந்தப் பையன் மாதிரியே என்னை கேள்வி கேட்டு உயிர வாங்குறான் என் பையன்’ என்பதே பல தாய்மார்களின் புலம்பலாக இருக்கிறது. நாள் முழுக்க அவர்களை சோர்வடையாமல் வைத்திருக்கின்றன இந்நிகழ்ச்சிகள். எப்படியோ அடிக்கும் வெயிலில் ‘வெளியே கூட்டிட்டுப் போங்க மம்மி’ என்று சொல்லாமல் டிவி ரிமோட்டை தன் வசப்படுத்திக்கொண்டிருப்பது பல பெற்றோர்களின் செலவை தக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
-ஜெ.சதீஷ்
மேலும் செய்திகள்
MUSEUM OF SELFIES
குரல்கள் - திருமணத்துக்குப் பிறகு சுதந்திரத்தை இழக்கிறீர்களா?
பணியிடங்களில் பாலியல் தொல்லையா?
மதங்கள் பெண்களை ஒடுக்குகின்றனவா ?
வெளிநாடு போறீங்களா
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!
பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!
காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது
LatestNews
ஏரியில் மூழ்கி 2 நண்பர்கள் பலி
00:17
மே 2ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்க திட்டம்
21:43
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: டெல்லி அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு
21:41
திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட பைனான்சியர் தனபால் உளுந்தூர்பேட்டையில் மீட்பு
21:35
தமிழன் கோழை இல்லை, வேண்டிய இடத்தில் வீரத்தை காட்டுவான்: கவிஞர் வைரமுத்து
21:29
சென்னை வியாசர்பாடியில் துப்பாக்கிமுனையில் 2 ரவுடிகள் கைது
21:00