SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியப்பில் விரியும் விழிகள்

2017-06-15@ 14:28:22

நன்றி குங்குமம் தோழி

இன்றைய இளைஞர்கள் பல விஷயங்களில் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர்களாக உள்ளனர். கைபேசியும், இணையமுமாக எப்போதும் குறும்புடன், விளையாட்டுத்தனமாக இருக்கும் இளைஞர் பட்டாளம், சில சமயம் வித்தியாசமாகவும் யோசித்து, தங்களுக்கு பிடித்த விஷயத்தையே தொழிலாக மாற்றுவதில் திறமைசாலிகள் என்பதற்கு சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் ‘த்ருத்தி சர்ப்ரைஸ் ஈவென்ட்ஸ்’ ஒரு உதாரணம்“நாங்கள் இருவரும் ஒரே கல்லூரி, ஆனால் நான் மெக்கானிக்கல் இஞ்சினியர். அவன் விஷுவல் கம்யூனிகேஷன்” எனப் பேசத் துவங்கிய வைதேகி, சென்னையில் மூன்றாவது பெஸ்ட் டீமாக இயங்கும் ‘ஹிப் ஹாப்’ டான்ஸ் குழுவில் இருக்கிறார். அவர் நமக்கு அறிமுகம் செய்த அவரின் நண்பர் சாமுவேல் லெனின் பிரபாகரன், சினிமாக் கனவுகளோடு இயங்குகிறார்.

“எங்கள் படிப்புதான் வேறுவேறு, ஆனால் எங்கள் சிந்தனை ஒன்று. அதனால் இருவரும் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த த்ருத்தி சர்ப்ரைஸ் ஈவென்ட்ஸ்” என்றார். அது என்ன த்ருத்தி என்ற நம் கேள்விக்கு, ‘த்ருத்தினா’ ஜாய் என அர்த்தம். சுருக்கமாகச் சொல்லணும்னா, நம்முடைய பரபரப்பான இந்த சிட்டி வாழ்க்கையில நமக்கு தெரிந்த ஒரு நபரை.

ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா, அவருக்குத் தெரியாமலே, ஒரு ஸ்பெஷல் மூவ்மெண்ட, ரொம்ப சர்ப்ரைஸா அவருக்கு கொடுத்து,  அந்த நாள் முழுவதும் அவரை மகிழ்ச்சியா ஃபீல் பண்ண வைக்கிறது. அதுக்கு எங்களால் முடிஞ்ச ஒரு சின்ன முயற்சி அவ்வளவுதான்” என்றனர். “சாமுக்கு எப்பவுமே எதையாவது சர்ப்ரைஸ் கொடுத்துக்கிட்டே இருக்கிறது ரொம்பப் பிடிக்கும்.எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அங்க ஒரு சர்ப்ரைஸ், சாம் மூலமாக கட்டாயம் இருக்கும். அது அவரோட ஹாபி. நானும் அப்படித்தான். எங்க குடும்ப நிகழ்ச்சி, என் குடும்ப உறுப்பினர்களுடைய பிறந்தநாள் இவைகளில் ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்துக்கிட்டே இருப்பேன். ‘டிரஸ்ஸர் ஹன்ட்’ மாதிரியான வேலைகளைச் செய்வேன். எங்களிருவருக்கும் இருந்த இந்த ஹாபிதான் எங்கள் தொழிலின் மூலதனம்.

ஏன் இதை ஒரு தொழிலாக மாற்றக்கூடாது என்ற சிந்தனையே ‘த்ருத்தி ஈவென்ட்ஸ்’ என்னும் இந்த ‘சர்ப்ரைஸ் ஈவென்ட்ஸ்’ நிறுவனம். பிறந்தநாள், திருமண நாள், அனிவெர்சரி தினங்கள், மற்ற ஈவென்ட் எதுவாக இருந்தாலும், எங்களை அணுகினால், நீங்கள் விரும்பும் நபருக்கு கண்டிப்பாக உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஒரு சர்ப்ரைஸை நாங்கள் டிசைன் பண்ணி அவர்களுக்கே தெரியாமல் செய்துகாட்டி மிகவும் அசத்தி விடுவோம்” என்றார்.“ஒரு பெண் அவளோட லவ் அனிவர்சரிய செலிபிரேட் பண்ண விரும்பி எங்களை அணுகினாள். அவன் எந்த அளவு என்மேல லவ்வோட இருக்கான்னு எனக்குத் தெரியணும்னு எங்ககிட்ட கேட்டா. உடனே அவங்க லவ் அனிவர்சரி டே அன்று அவனுக்குத் தெரியாமலே எங்க டீம் ஏற்கனவே திட்டமிட்டபடி, அவன் கண் முன்னாடி அந்தப் பெண்ணை நண்பர்களை வைத்து கடத்தினோம்.

அடுத்த நிமிடத்திலிருந்து அவனை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஒவ்வொரு இடமாக அவனை அலைய வைத்து பின் தொடர்ந்தோம். அந்த பெண்ணிற்காக எந்த அளவிற்கு மெனக்கெடுகிறான் என்பதை அவன் அறியாமலே அவனை அலையவிட்டு, வீடியோவாக்கி அந்த நாளின் முடிவில் அவனை அழ வைத்து, கடைசியாக அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி, அந்தப் பெண்ணை அவன் கண் முன்னால் திடீர் என நிறுத்தினோம்” என்றார்.“சென்ற வாரம் என் உறவுக்காரப் பெண்ணிற்கு பிறந்தநாள். அதாவது பேச்சிலர் பர்த்டே. அடுத்த ஆண்டு கண்டிப்பாக அவளுக்குத் திருமணமாகிவிடும். அவளின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அவளது பெற்றோர் என்னை அணுகினர். தொடர்ந்து அவளை நாங்கள் ஃபாலோ செய்து, அவளுக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்கள், அவளுடைய நண்பர்கள், அவளின் செயல்பாடுகள் என ஒவ்வொன்றாக கலெக்ட் செய்து கொண்டோம்.

பிறந்த நாளுக்கு முதல் நாள் அவளின் முகநூல் பக்கத்தில், வண்ண வண்ண கலர் பலூன்களுக்கு நடுவே ஒரு பெண் ஆச்சரியம் மேலிட நிற்பதுபோல் ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்து அதன் கீழ் “Every girl want a surprise like this” எனப் பதிவிட்டிருந்தாள். அவள் விரும்பிய அதையும் நாங்கள் எங்களின் கான்செப்டிற்குள் கொண்டு வந்தோம்.நாங்கள் ப்ளான் செய்து கொடுத்ததுபோல் அவளின் பிறந்த நாள் அன்று, அவளின் குடும்ப உறுப்பினர்கள் அவளது பிறந்த நாளை முற்றிலும் மறந்துவிட்டதுபோல் அதைப் பற்றிய எந்தவித உணர்வையும், செயலையும் வெளிக்காட்டாமல் அவரவருக்கு வேலையிருப்பதுபோல், அவளிடம் ஆளுக்கொரு வேலையினைச் சொல்லிவிட்டு கிளம்பிப் போய்விட்டனர்.

யாருமே தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையே என்ற உச்சகட்ட வெறுப்பிற்கு அவளை கொண்டு வந்து, அவளின் நண்பரை வீட்டிற்கு அனுப்பி, நாங்கள் திட்டமிட்டுக் கொடுத்ததுபோல், நாங்கள் ஏற்பாடு செய்திருந்த உணவகத்திற்கு அழைத்து வரும்போது, வழியிலே ஒருவரை அனுப்பி அவளை போட்டோ எடுக்க வைத்து, செட்அப் செய்யப்பட்ட அந்த நபருடன், இவளின் நண்பன் ஏன் அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்தாய் என பெரிதாக சண்டையிட வைத்து அவள் மூடை மிகவும் இரிட்டேட் செய்து, அவளை அந்த மனநிலையிலே நாங்கள் ஏற்பாடு செய்த உணவகத்திற்கு அழைத்துவர வைத்தோம்அவள் உள் நுழைந்ததும், அவளுக்கு முன்பின் தெரியாத எங்களின் ‘ஹிப் ஹாப்’ டீமில் உள்ள நண்பர்கள் ஆடிக்கொண்டே அவள் முன் வந்து, மலர் கொத்துகளை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல, ஒன்றும் புரியாமல் நிற்கும் அவள் முன், ஆங்காங்கே மறைந்திருந்த அவளின் நண்பர்கள், உறவினர்கள், வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற அவளின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராய் வந்து பூங்கொத்தைக் கொடுக்க சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய்விட்டாள் அந்தப் பெண்.

சந்தோஷத்தில் அவளும் சேர்ந்து எங்கள் நடனக் குழுவுடன் இணைந்து ஆடத் துவங்கிவிட்டாள். முடிவில் அனைவரும் மிகப் பெரிய கேக்கை வரவழைத்து கட் செய்து, கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக்கும் அங்கேயே லஞ்ச் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அவளை அவளின் நண்பர்கள் நாங்கள் செய்து கொடுத்த திட்டத்தின்படி, வெளியே அழைத்துச்சென்று இருட்டிய பிறகு அவளை அவளது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.அவள் கதவைத் திறந்தபோது அவளது வீடு முழுவதும் இருட்டில் மெழுகுவர்த்தியால் ஏற்றப்பட்டு ஜொலிக்க, அவளின் அறைக்குள் அவள் முதல்நாள் முகநூலில் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் இருந்ததுபோல், அவளது அறை முழுவதும் வண்ண பாலூன்களால் நிரப்பி ஆங்காங்கே குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கொடுக்க நினைத்த அத்தனை பரிசுப் பொருட்களையும், பலூன்களுக்குள் இடையிடையே வைத்து அவள் விரும்பிய ரியல் சர்ப்ரைஸை கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டோம்” என்று அந்த வீடியோ புட்டேஜ்களையும் புகைப்படங்களையும் காட்டினர்.

“உங்கள் பட்ஜெட் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் தரும் பணத்தில் அதற்கேற்ற சர்ப்ரைஸ் கண்டிப்பாக, நீங்கள் விரும்பும் நபருக்கு ரொம்ப சர்ப்ரைஸாகத் தரப்படும்” என்கின்றனர். இவர்கள் தொடர்ந்து வழங்கும் சர்ப்ரைஸை பார்த்து தற்போது ஜப்பானிய நிறுவனம் ஒன்று தங்களின் டிஜிட்டல் மணி ப்ரொமோஷனுக்கு சர்ப்ரைஸ் தரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். “இதோ அடுத்த சர்ப்ரைஸுக்கு தயாராகிவிட்டது எங்களின் த்ருத்தி டீம்” என நண்பர்கள் இருவரும் உற்சாகமாக தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் உலகம் விளையாட்டாக மட்டுமல்ல... திறமைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

-மகேஸ்வரி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2018

  24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்