SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சம் தவிர் பெண்ணே!

2017-05-19@ 15:49:53

நன்றி குங்குமம் தோழி

பயந்து வாழ்ந்த காலங்கள் இறந்து விட்டன. யாரையும் எதிர்கொள்வோம் என்று கம்பீரமாக எழுந்து நிற்கிறாள் சிறுமி ஒருத்தி சிலையின் வடிவில். பெண்களுக்கு அச்சம் கிடையாது என்று பொதுவாக இந்த உலகம் நம்புவது இல்லை. பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று பெண்களுக்கே உணர்த்துவது போல், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு வித்தியாசமான வெண்கலச் சிலை.

அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் வால் ஸ்ட்ரீட் பகுதியில், ஒரு சிறுமி காளையை எதிர்த்து நின்று சண்டையிடுவது போல், கிரிஸ்டன் விசபல் எனும் சிற்பக் கலைஞர் ஒரு சிலையை வடிவமைத்துள்ளார். ‘அச்சமற்ற பெண்’ என்று அதற்குப் பெயரிட்டு கொண்டாடி வருகிறார்கள் இளம் பெண்கள் அமைப்பினர். பெண்கள் எந்த துறையிலும் தைரியமாக செயல்படக்கூடியவர்கள், எதையும் எதிர்த்து போராடக்கூடிய குணம் படைத்தவர்கள் என்று பறைசாற்றுகிறது இந்த சிலை.

கம்பீரமாக நின்று காளையை எதிர்கொள்ளும் சிறுமியின் சிலை அனைத்துத் தரப்பு பெண்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் சிலையை ஸ்டேட் ஸ்ட்ரீட் குளோபல் நிர்வாகத்தில் பணிபுரியக்கூடிய இளம் பெண்கள் ‘எங்களுடைய நிர்வாகத்  திறமையை வெளிக்கொண்டுவரவே இந்த சிலை வடிவமைக்கப்பட்டது’ என்றும் ‘இளம் பெண்கள் அமைப்பின் சின்னமாக இந்த சிலை இனி இருக்கும்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிற டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களையும் பெண்கள் நடத்தி வருகின்ற இந்தச் சூழலில், இந்த சிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது. ‘‘லட்சக்கணக்கான இளம் பெண்களை கவர்ந்த இந்தச் சிலை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்படும் ஒன்றாக இந்தச் சிலை உருவெடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகப் பெண்கள் அனைவரும் அச்சம் இன்றி செயல்படவே இந்த முயற்சி’’ என்று கூறுகிறார்கள் இளம் பெண்கள் அமைப்பினர்.

-ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-06-2018

    20-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்