SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையிலே கலைவண்ணம்

2017-05-19@ 15:42:50

நன்றி குங்குமம்தோழி

குவில்லிங் தோடுகள்

குவில்லிங் பேப்பரில் நாம் பலவிதமான நகைகளை செய்ய முடியும். கடந்த இதழில் குவில்லிங் வளையல் செய்வது குறித்து பார்த்தது போல் இந்த இதழில் குவில்லிங்  தோடுகள்(கம்மல்கள்) செய்யும் முறையைப் பார்ப்போம். பல வண்ண குவில்லிங் பேப்பரைப் பயன்படுத்தி, மேலே நம் விருப்புக்குரிய வண்ணக்கற்களை பதித்து நம் க்ரியேட்டிவிட்டிக்கு ஏற்ப விதவிதமான கம்மல்களை, விதவிதமான வடிவங்களில் தயார் செய்யலாம். குவில்லிங் நகைகள் செய்வதற்கான சூத்திரம் மிக நிதானமாக செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் உடை மற்றும் முக வடிவுக்கேற்ற விதவிதமான கம்மல்கள் செய்து அணிந்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

* குவில்லிங் பேப்பர் (3 வண்ணங்கள்)
* கத்திரிக்கோல்
* வொயிட் கம்
* குவில்லிங் டூல் (அ) குவில்லிங் நீடில்
* கொக்கிகள்
* வளையம்

குறிப்பு…
இந்த கம்மல் செய்ய மூன்று வண்ணங்களில் குவில்லிங் பேப்பர் எடுத்துக்கொள்ள வேண்டும். தோடுகளில் உள்பக்கம் வர வேண்டிய வண்ணத்தை மட்டும் ஒரு குவில்லிங் பேப்பரில் பாதியாக கட் செய்து கொள்ள வேண்டும். மற்ற இரண்டு வண்ணங்களையும் நான்கில் ஒரு பாகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ரோல் சரியான அளவில் வரும்.

செய்முறை...


1. 3 குவில்லிங் வண்ண பேப்பர்களையும் ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். உள்ளே வரும் வண்ணத்தை முதலிலும் இடையில் வரவேண்டிய வண்ணத்தை நடுவிலும் வெளியில் வரும் வண்ணத்தை இறுதியாக  என வரிசையாக ஒட்டவும்.

2. குவில்லிங் நீடிலில் குவில்லிங் பேப்பரை சொருக வேண்டும்.

3. மூன்று வண்ண பேப்பர்களையும் நீடிலில் வைத்து சுருட்ட வேண்டும். உள்ளே வரவேண்டிய வண்ண பேப்பரை முதலில் சுருட்டி முடியும் இடத்தில் கம் வைத்து ஒட்டி விடவும்.

4. கம் போட்டு ஒட்ட வைத்த இடத்தை 2 நிமிடம் அப்படியே பிடித்திருக்கவும். ஓவல் ஷேப்பில் அழுத்திப் பிடிக்கவும்.

5. பூக்களின் இதழ் வடிவில் ஓவல் ஷேப்பில் 6 ரோல்களையும் தயார் செய்யவும். நடுவில் வைக்க ஒரு ரோல், மேலே வைக்க ஒரு ரோல் என ஒரே வண்ணத்தில் 2 ரோல்களை தனியாக தயார் செய்யவும். இது உருளை வடிவத்தில் இருக்க வேண்டும். இந்த தனி ரோல் செய்ய குவில்லிங் பேப்பரை சரி பாதியாக இரண்டாக வெட்டிக்கொள்ளவும். ரோல்கள் தயாரான பிறகு காயவிடவும். எந்த ஒரு ரோல் செய்தாலும் அந்த கம் காயும் வரை வைத்து பின்னர் தொடர்ந்து மற்ற வேலைகள் செய்வது நல்லது.

6. தனி வண்ணத்தில் இருக்கும் ரோலைச் சுற்றி ஓவல் ஷேப்பில் உள்ள 6 ரோல்களையும் சுற்றி ஒட்டி பூ வடிவத்தில் தயார் செய்யவும்.

7. மீதமுள்ள ஒரு தனி வண்ண ரோலை (படுக்க வைக்கும் வடிவத்தில்) ஒரு வளைத்தில் இணைத்து கொக்கியுடன் சேர்க்கவும்.

8. கொக்கியுடன் இணைக்கப்பட்ட ரோலை பூ வடிவத்துடன் ஒட்டவும். அழகிய கம்மல் தயாராகி விடும்.  டிரான்ஸ்ஃபரன்ட் நெயில் பாலீஷை அந்த கம்மல்களின் மேல் பூசி விடவும்.

கம்மலுக்கு ஏற்ப வளையல், கழுத்து செட், க்ளிப், மோதிரம் போன்றவையும் செய்யலாம். வளையல் செய்யும் முறையை ஏற்கனவே பார்த்திருப்பதால் நெக்செட், க்ளிப், மோதிரம் போன்றவற்றையும் இனி வரும் இதழ்களில் பார்க்கலாம்.

எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்