கலர்ஃபுல் பத்திக் மற்றும் டை அண்ட் டை!
2015-02-02@ 15:59:25

நீங்கதான் முதலாளியம்மா!
என்னதான் டிசைனர் சேலைகளும் சமிக்கியும் ஸ்டோன்களும் பதித்த ஆடம்பர சேலைகளும் வந்தாலும், காட்டன் சேலைகளின் அழகுக்கு இணையே இல்லை. அதிலும் இயற்கை முறையில் பிரின்ட் செய்யப்பட்ட காட்டன் சேலைகளுக்கும் சல்வார்களுக்கும் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. என்ன ஃபேஷன் மாறினாலும், பத்திக் மற்றும் டை அண்ட் டை பிரின்ட்டுகளுக்கு எல்லாக் காலங்களிலும் குறையாத மவுசு உண்டு. ஆனாலும், நவீனமயத்தின் ஆதிக்கத்தில் சமீப காலங்களாக பத்திக் பிரின்ட்டையும், டை அண்ட் டை பிரின்ட்டையும் பரவலாகப் பார்க்க முடியவில்லை.அந்த ஆதங்கத்தைப் போக்குகிறார் சென்னையைச் சேர்ந்த அருணா விஜயகுமார். பிளாக் பிரின்ட்டிங்கில் ஸ்பெஷலிஸ்ட்டான இவர், லேட்டஸ்ட்டாக பத்திக் மற்றும் டை அண்ட் டை பிரின்ட்டிங்கையும் ஆரம்பித்திருக்கிறார்!
‘‘பத்திக் பிரின்ட்டுங்கிறது மெழுகுக் கரைசல்ல முக்கி, பிறகு சாயம் ஏத்தற முறை. முன்னல்லாம் ஊசியால மெழுகைத் தொட்டு ரொம்பப் பொறுமையா பண்ணிட்டிருந்த இந்த பிரின்டிங்கை இப்ப பிளாக்ஸ்னு சொல்ற ரெடிமேட் டிசைன் கட்டைகளை வச்சு ஈஸியா பண்ற முறையைக் கண்டுபிடிச்சிருக்கேன். டை அண்ட் டைனு சொல்றது வேற ஒண்ணு மில்லை... பாந்தினினு சொன்னா எல்லாருக்கும் சட்டுனு புரிஞ்சிடும். டிசைன் செய்ய வேண்டிய துணியை தேவைக்கேற்ப சாயம் ஏத்தி, பிறகு தேவையான இடங்கள்ல முடிச்சுப் போட்டுக் கட்டி வச்சு, மறுபடி நமக்கு விருப்பமான சாயம் ஏத்தி, கண்ணைக் கவரும் கலர்ஃபுல் டிசைன்களை கொண்டு வரும் டெக்னிக்.
சாதாரண காட்டன் துப்பட்டாவைக்கூட பத்திக் மற்றும் டை அண்ட் டை முறையில ஆடம்பரமானதா மாத்திடலாம். சுடிதார், ஜீன்ஸ் டாப்ஸ், குர்தி, ஜாக்கெட், தாவணி, பெட் ஷீட், தலையணை உறை, சோபா கவர், சின்னச் சின்ன நாப்கின்கள்னு எல்லாத்துலயும் இந்த ரெண்டு டெக்னிக்கையும் செய்து அழகுப்படுத்தலாம். அனுபவம் இல்லாதவங்க புடவையில பண்றதுக்கு சிரமப்படுவாங்க. வாக்ஸ், உட்டன் பிளாக்ஸ், கலர்ஸ், கெமிக்கல்ஸ்னு பத்திக் பிரின்ட்டிங்குக்கும், டார்க் கலர்களுக்கு நெஃப்தால், லைட் ஷேடுகளுக்கு வாட்னு குறிப்பிட்ட கலர்களும், மார்க்கர், நூல்னு டை அண்ட் டை பிரின்ட்டிங்குக்கும் அடிப்படையான பொருட்கள் தேவை.
குறைஞ்ச பட்சமா 5 ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. ஒரு நாளைக்கு 10 டாப்ஸ் வரை பிரின்ட் பண்ணலாம். பத்திக் பிரின்ட் பண்ணிக் கொடுக்க 150 ரூபாயும், டை அண்ட் டைக்கு 100 ரூபாயும் வாங்கலாம். கற்பனைத் திறன், கலர் காம்பினேஷனை பொறுத்து 50 சதவிகிதத்துக்கு மேலயே லாபம் பார்க்கலாம் என்கிற அருணாவிடம், ஒரே நாள் பயிற்சியில் பத்திக் மற்றும் டை அண்ட் டை இரண்டையும் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். (90031 24632)
மேலும் செய்திகள்
மெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்... மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்!
டீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
டெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்!
ஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்
நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!
சணல் பை விற்பனையில் சபாஷ் வருமானம்!
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்