SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்தும் அறிதல் அவசியம்

2018-03-12@ 17:02:12

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி


சமீபத்தில் என் தோழியின் கணவர் திடீரென இறந்து போனார். மிக மிக வேண்டியவர் என்பதால் விழுந்தடித்துக்கொண்டு ஓடினோம். அங்கு சென்ற பின்தான் தோழியிடம் போதிய அடிப்படை தொகைகூட கைவசம் இல்லாதது தெரிந்தது. கணவர் மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கைதான் தோழிக்கு. பண விஷயங்கள், வங்கி விவரங்கள் அனைத்தும் கணவரே கையாண்டிருக்கிறார். உதாரணமாக இரண்டு, மூன்று வங்கிகளின் ஏ.டி.எம்.கார்டுகளை வைத்திருந்தார். ஆனால் அவற்றின் பின் நம்பர்கள் மனைவிக்குத் தெரியவில்லை. எங்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியவில்லை. இதனால் உடனடியாக அவரால் பணம் புரட்ட இயலவில்லை. உடனே நாங்கள் சுதாரித்து, எங்கள் ஏ.டி.எம்.களின் மூலம் பணத்தை எடுத்துத்தான் 13 நாட்களை ஓட்ட முடிந்தது.  

தோழி நிச்சயம் பணத்தை திருப்பி தந்து விடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆறுமாதங்களாவது ஆகும். பிரச்னை அதுவல்ல... தோழியின் கணவராவது, ஏ.டி.எம் பின்நம்பர்களை தோழியிடம் தெரிவித்து, யார் கேட்டாலும் கூறக்கூடாது என சொல்லி வைத்திருக்கலாம் அல்லது அவரே, தன்னுடைய வங்கி கார்டுகளின் பின்நம்பர்களை, டைரியின் ஒரு பக்கத்தில் எழுதி, அதனை மனைவியிடம் எங்குள்ளது, அவசர சூழலில் எப்படி பணம் எடுப்பது போன்றவற்றை சொல்லிக்கொடுத்திருக்கலாம். அவர் செய்யவில்லை.

இது என் தோழிக்கு மட்டுமல்ல சற்று வயதான பெண்களுக்கு இது ஒரு பிரச்னை.  எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என இனியும் பெண்கள் இருக்கலாகாது. கணவரிடம்  அவற்றை கேட்டு எழுதி வைத்துக்கொள்வது மிக மிக அவசியம். சில பெண்களுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுப்பது எப்படி என்று கூட தெரியாமல் இருக்கின்றனர். இருமுறை சென்று கற்றுக்கொண்டால் போதும். அது ஒரு விஷயமே இல்லை.

இதனால் திடீர் தேவைகளின்போது மனைவி அநாவசிய சங்கடங்களுக்குள் சிக்குவதை தவிர்க்கலாம். தோழியின் சிரமம் பிற பெண்களுக்கு நேர வேண்டாம் என்றால், கணவரின் பண விவரங்களைக் கேட்டு அறிந்து வைத்துக்கொள்வது மிக மிக அவசியம். இன்று யாருக்கும் எதுவும் எப்போதும் நேரலாம் என்ற நிலையில் பெண்கள் இதனை அறிய வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும். சகோதரிக்கு இரண்டு குழந்தைகள் இருந்து இருவரும் இறந்து விட்டனர். தோழி - உண்மையில் என் சகோதரி. 13 நாட்கள் அவர் கூடவே இருந்தோம்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்,
பெங்களூர்-102.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்