SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ மேக்கப் ரிமூவ் தூங்குவதால் பிரச்னைகள் உண்டா ?

2017-08-11@ 12:27:27

நன்றி குங்குமம் தோழி

-கி.ச.திலீபன்

பதிலளிக்கிறார் கண் மருத்துவர் சௌந்தரி... ‘‘மேல் இமை, கீழ் இமை இரண்டிலுமே நிறைய சுரப்பிகள் இருக்கின்றன. அவை தடையில்லாமல் சுரந்தால்தான் கண்ணின் இயக்கம் சரி வர இருக்கும். ஐ மேக்கப் போட்டு விட்டு அதை அகற்றாமல் அப்படியே தூங்குவதன் மூலம் அவை இந்த சுரப்பிகளை அடைத்து விடுகின்றன.

இதனால் கண்ணீர் படலம் பாதிப்புக்குள்ளாகும்.  நீர்ப்பசை இல்லாமல் கண் வறட்சிக்குள்ளாகும். வறட்சி அதிகரிக்கும்போது கண் சிவந்து போகும். இதனால் கண் எரிச்சல் ஏற்படும். இது தொடர்ச்சியாக நடந்தால் கண்ணில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஐ மேக்கப் போடுவது தவறே இல்லை.

ஆனால் அதை தினந்தோறும் அகற்றி விட்டு தூங்கச் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மேக்கப்பை தண்ணீரில் கழுவி மட்டும் அகற்ற முடியாது. ஏனென்றால் பெரும்பாலான சாதனங்கள் வாட்டர் ப்ரூஃப் ஆக இருக்கின்றன. இதனை அகற்றுவதற்கென க்ரீம்கள் இருக்கின்றன. அதனைப் பயன்படுத்தலாம்.

இல்லையென்றால் தேங்காய் எண்ணெய் மூலம் அகற்றலாம். ஐ மேக்கப் சாதனங்களை தரமானதாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும். தரமற்ற சாதனங்களை பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்படலாம். தொடர்ச்சியாக ஐ மேக்கப் போட்டு வருபவர்களுக்கு அது கண்ணில் தேங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அழகு முக்கியம்தான் அதே சமயம் அது ஆபத்தில் முடிந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.’’

(வாசகர்கள் இது போன்ற சந்தேகங்களை எங்களுடைய முகவரிக்கு அனுப்பலாம். உங்களுடைய சந்தேகங்களுக்கு ‘டவுட் கார்னர்’ பகுதியில்  விடை கிடைக்கும்.)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • republice_dayy1

    குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்