SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹேர் ஆயில்

2017-05-19@ 15:44:44

நன்றி குங்குமம் டாக்டர்

ஆராய்ச்சி


மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறையும், கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பும் இணைந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களில் பயன்படுத்தப்படும் ஹேர் ஆயில்களின் தரம் குறித்துப் பரிசோதனை செய்திருக்கிறது.இந்தப் பரிசோதனையில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்திருக்கிறது. ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான சந்தானராஜனிடம் ஹேர் ஆயில்களின் தரம் பற்றி என்ன தெரிய வந்திருக்கிறது என்று கேட்டோம்....

‘‘எங்களுடைய ஆய்வின் முடிவாக முக்கியமான சில விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறோம். பல வண்ணங்களில் விற்கப்படும் ஹேர் ஆயில்கள் ஒப்பனைப் பொருட்களாக இல்லை.மாறாக அவை சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்துகளாக(Medicinal product) உள்ளன. இந்த எண்ணெய்களில் தாவர எண்ணெய்களும், மூலிகைகளும் அடங்கியிருந்தது. ஒரு சில எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களில் மருத்துவ குணங்கள் பற்றிய விளம்பரங்கள் இருந்தன. ஆனால், பல எண்ணெய்களின் லேபிளில் விற்பனைக்குரிய பொருட்களின் மூலம் பற்றிய விபரங்களே இல்லை.

தலைமுடியில் ஏற்படும் நரைத்தன்மை, வழுக்கை மற்றும் புண்களைத் தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டவை என்று சில நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி இருக்கின்றன. இதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தாவர எண்ணெய்(Vegetable Oil) மட்டும் அடங்கியது, தாது எண்ணெய்(Mineral oil) மட்டும் அடங்கியது, தாவர எண்ணெயும் தாது எண்ணெயும் கலந்தது(Mixture of vegetable oil and mineral oil) என்று மூன்று வகைகளாக இந்த ஹேர் ஆயில்கள் இருந்தன.

ஆய்வுக்குட்படுத்திய 10 எண்ணெய்களில் ஒன்றில் 40% தாது எண்ணெய் கலந்துள்ளது. ஹோமியோபதி மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட ஒன்றில் 0.98% ஆல்கஹால் உள்ளது. ஹேர் ஆயில் தயாரிக்கப்பட்ட முறை குறித்த தகவல் 3 எண்ணெய்களின் லேபிள்களில் மட்டுமே இருந்தது’’ என்கிற சந்தானராஜன், ஹேர் ஆயில்கள் என்ன தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்குகிறார்.‘‘மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1945-ன் படி, பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், அதனுடைய லேபிளில் குறிப்பிட்டுள்ளபடி சரியான தரத்தில் இருக்க வேண்டும். இந்த எண்ணெய்கள் சரும பாதுகாப்புக்கு உகந்ததா என்பதை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.எண்ணெயின் மொத்த அளவில் ஒரு சதவீதத்துக்கும் மேலாக கலந்துள்ள எல்லா பொருட்கள் பற்றிய தகவலும், லேபிளில் இறங்கு வரிசையில் இருக்க வேண்டும்.தாது எண்ணெய் கலந்திருந்தால் அதன் சதவிகிதத்தையும் குறிப்பிட வேண்டும். ஹேர் ஆயில்களில் வண்டல் தங்கக்கூடாது. கெட்ட வாசனையுடன் இருக்கக்கூடாது. காரல் தன்மை உண்டாகாத எண்ணெயே சிறந்தது. நிறங்களும் வாசமும் மருந்து பொருட்கள் சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும்’’ என்கிறார்.

இதையெல்லாம் கவனிங்க...

பேக்கிங் செய்யப்பட்ட ஹேர் ஆயில்களை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாக்கெட் லேபிளில் தயாரிப்பாளரின் பெயர், முகவரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகக் குறியீடுகள் இருக்க வேண்டும். சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் ஒப்பனைப் பொருட்கள் என்னென்ன கலந்துள்ளன என்ற தகவல் இருக்க வேண்டும்.எண்ணெயில் அடங்கியுள்ள அனைத்து வகை பொருட்கள் பற்றிய தகவல் இருக்க வேண்டும். மொத்த அளவு, அதிகபட்ச சில்லறை விலை, பாட்ச் எண், சேமிப்பு வழிமுறைகள், காலாவதி தேதி, நுகர்வோர் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண், உரிமம் எண்/உரிமம் வகை, எச்சரிக்கை குறிப்புகள் போன்ற விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக, சரும நல மருத்துவரின் ஆலோசனையுடன் ஹேர் ஆயிலைத் தேர்ந்தெடுப்பது இன்னும் பாதுகாப்பானது.

- க.கதிரவன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

  • stella_unavu

    ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்பான உணவு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X