‘‘தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே வச்சிருக்காரு?’’
‘‘அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட ‘வெயிட்’டை காண்பிக்கவாம்!’’
& ஜி.சுந்தரராஜன், விருதுநகர்.
‘‘பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?’’
‘‘அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!’’
& ஜி.சுந்தரராஜன், விருதுநகர்.
‘‘என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?’’
‘‘தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!’’
& பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்&1.
‘‘என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?’’
‘‘தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!’’
& ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.
‘‘காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?’’
‘‘பின்ன, பால்கடை வாசல்ல ‘இங்கு சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்’னு எழுதியிருக்காங்களே!’’
மேலும்