எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் நீங்கள், எந்த சூழ்நிலையிலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்கள் 10வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள்.
குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் காரண காரியமே இல்லாமல் காரசாரமான விவாதங்களெல்லாம் வந்ததே! இனி அந்த நிலை மாறும். தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உங்களுக்குள் கலகம் செய்து பிரச்னை ஏற்படுத்தியவர்களை இனி ஓரங்கட்டுவீர்கள். பழைய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ என்று முழி பிதுங்கி நின்றீர்களே! இனி அதற்கான வழி வகைகள் கிட்டும். பிள்ளைகளிடம் அவ்வப்போது கோபப்பட்டீர்களே! இனி அரவணைத்துப்போவீர்கள். மகனுக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! இப்பொழுது கூடி வரும்.
4.5.2010 முதல் 6.11.2010 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் பணவரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், எதிலும் வெற்றியும் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ், கௌரவம் உய ரும். நீதிமன்ற வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். முதுகுவலி, சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். ஆனால், சனிபகவான் ராசிக்குள் ஜென்மச்சனியாக அமர்ந்திருப்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அல ட்சியமாக இருக்காதீர்கள். வறுத்த, பொரித்த, அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். நாக்கை கொஞ்சம் கட்டுங்கள். மனைவி வழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.
குரு 10ம் வீட்டைப் பார்ப்பதால் தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உங்களை வாழ்த்தும். சாதுக்கள் உதவுவார்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். சொந்த ஊரில் இழந்த செல் வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். ராசிக்கு 4ல் ராகுவும் 10ல் கேதுவும் நிற்பதால் தாயாருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். நரம்புக் கோளாறு வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவினங்களும் வந்துபோகும். வேலைச்சுமை வாட்டியெடுக்கும். ஆனால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரித் தொகைகளை உடனுக்குடன் செலுத்துவது நல்லது. வாகனத்தில் அடிக்கடி உதிரிபாகங்களை மாற்ற வேண்டியது வரும்.
வியாபாரிகளே! சரக்குகளை நிரப்பி வைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி சந்தை நிலவரங்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடியெல்லாம் தளரும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்கள் மற்றும் பங்குதாரர்கள் சில சமயங்களில் குடைச்சல் தந்தாலும் அசரமாட்டீர்கள். மார்ச், ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகஸ்தர்களே! பழைய பிரச்னைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்களே! அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். என்றாலும் ஏப்ரல் மாதம் வரை முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். ஜூன் மாதத்திலிருந்து அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.
கன்னிப் பெண்களே! மனக்குழப்பம், தாழ்வு மனப்பான்மை நீங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள். விட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவர்களே! உங்களுடன் சும்மா சுற்றித் திரிந்த நண்பர்கள் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுவிடுவார்கள். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். அரசியல்வாதிகளே! கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்று தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். என்றாலும் கட்சிக்குள் உங்களுக்கு எதிராக சில சதி வேலைகளும் நடக்கும். கலைத்துறையினரே! வாய்ப்பு தானாகக் கிடைக்கும் என காலம் கடத்திக் கொண்டிருந்தீர்களே! இனி பொறுப்பாக செயல்பட்டு சின்ன வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். விவசாயிகளே! நவீனரக உரங்களால் விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள்.
இந்தப் புத்தாண்டு பிரபலங்களை பயன்படுத்திக்கொண்டு முன்னேற வைப்பதுடன், புதிய பாதையில் சென்று வெற்றி பெறவும் வைக்கும்.
பரிகாரம்:
மதுரையில் அருள் பாலிக்கும் சுந்தரேஸ்வரர் சமேத மீனாட்சி
அம்மனை வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
|





