அனுபவ அறிவுடன், படிப்பறிவையும் தந்து அதனுடன் உலக நடப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடிய புதனின் ராசியான மிதுனத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் நாடெங்கும் படித்தோர் எண்ணிக்கை உயரும். அரசும் மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல சலுகைத் திட்டங்களை அறிவிக்கும். தாய்மொழியைவிட அந்நியமொழி வளரும். குழந்தை தொழிலாளர் மற்றும் இடையிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்துபவர் எண்ணிக்கை குறையும். தொடக்கநிலை பள்ளிக் குழந்தைகளை தாக்கும் நோய்கள் வரக்கூடும்.
ஆண்டு பிறக்கும் நேரத்தில் குரு கும்பத்தில் நிற்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகள் செய்து புதிய தொழிற்சாலைகளை அமைக்கும். வங்கிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வீடு, வாகனம் வாங்க சலுகை வட்டியில் பணத்தை வாரி வழங்கும். ஆனால் வங்கிகளில் தவறான பணக்கையாடல்கள் கண்டுபிடிக்கப்படும். சில வங்கிகள் போராடி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும்.
எண் ஜோதிடப்படி 2010ம் ஆண்டு குருவின் ஆதிக்க எண்ணான 3ல் வருவதுடன் ஒட்டு மொத்த இயக்கம் (1+1+2010=5) புதனின் 5ம் எண்ணில் அமைவதால் கல்வியாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். மொழி அறிஞர்கள் முன்னேறுவார்கள். ஆன்மிகத்தில் போலியானவர்கள் அகற்றப்படுவார்கள். சிறு தொழில்கள் மீண்டும் வளரும்.
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதுடன் அதன் எதிர் கதிர்வீச்சு கிரகமான கேதுவுடன் சந்திரன் நிற்பதால் மக்களிடையே சிற்றின்ப வேட்கை பெருகும். குறுக்கு சிந்தனை, வக்ர சிந்தனை வயப்படுபவர்கள் அதிகரிப்பர். வருடம் பிறந்த உடனேயே சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் கருக்கலைப்பு, குறை பிரசவங்கள் மற்றும் இதய நோயால் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் கடக ராசிக்கு 6வது வீட்டில் சுக்கிரன் ராகுவுடன் நிற்பதால் சாலை விபத்துகள், வான் விபத்துகள் அதிகரிக்கும். பொது மகளிர் நலனுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருநங்கைகளுக்கு சலுகைகள் கிடைக்கும். வாகனம், டி.வி, செல்போன் விலை மேலும் குறையும். விவாகரத்துகள் அதிகரிக்கும். மக்களிடையே தொலை நோக்குச் சிந்தனை குறையும். இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் வரை தடு மாறும். 4.5.2010 லிருந்து இந்தியாவின் கடக ராசிக்கு 9ம் வீட்டில் குரு வந்தமர்வதால் அதுமுதல் நாட்டின் வருமானம் உயரும். உலக வங்கியில் பெற்றுள்ள கடனில் ஒருபகுதியை அடைத்து மேலும் கடன் தொகையை இந்தியா பெறும். வேலை வாய்ப்பு பெருகும். கிராமங்கள் செழிப்படையும்.
சனிபகவான் புதன் வீட்டில் வலுவாக இருப்பதால் புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதிமன்றம் ஆணைகளை பிறப்பிக்கும். புகழ்பெற்ற கோயில் கோபுரங்கள் பாதிப்படையும். பொதுச் சொத்துகளை அபகரிப்பவர்கள் அதிகரிப்பார்கள்.
இந்த வருடம் முழுக்க செவ்வாய் பலவீனமாக இருப்பதால் பாரம்பரியக் குடும்பங்களில் பாகப்பிரிவினை போக்கு அதிகரிக்கும். மக்களிடையே சுயநலம் மேலோங்கும். பெரிய நிறுவனங்கள் உடையும். வருடம் பிறந்த உடனேயே சந்திர கிரகணம் ஏற்படுவதின் இன்னொரு பாதிப் பால் நாட்டில் பாதுகாப்பு குறைகள் உண்டாகும். உள்நாட்டு குழப்பங்கள் அதிகரிக்கும். ராணுவ ரகசியங்கள் கசியும். சீனாவால் அச்சுறுத்தல் வரும். வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் நாட்டை துண்டாடும் முயற்சியில் இறங்கும். ஈழத்திலும் பாகிஸ்தானிலும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும்.
கலைத்துறை சூடு பிடிக்கும். என்றாலும் 27.10.2010 முதல் 26.11.2010 வரை சுக்கிரன் வக்ரமாவதால் கலைத்துறையினர் பாதிக்கப்படுவார்கள். 21.7.2010 முதல் 6.9.2010 வரை செவ்வாய் - சனி சேர்க்கை இருப்பதால் இயற்கை சீற்றங்கள், துர்மரணங்கள், இழப்புகள், கலவரங்கள் அதிகரிக்கும்.
பொதுவாக இந்தப் புத்தாண்டு மக்களை சுகங்களை அனுபவிக்கத் தூண்டினாலும் வருங்காலம் பற்றிய அச்சத்தையும் தரும்.
பரிகாரம்:
ராகுவின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குறுக்கு வழியில் செல்லத் தூண்டும். நவீனம் என்ற பெயரில் போலி சுகங்களில் சிக்கிக் கொள்ளாமல், போதும் என்ற மனதுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும்.
புத்தாண்டு ராசி பலன்கள்
|
|
|
|
2010 விரதங்கள், விசேஷங்கள்!
![]() |
![]() |
![]() |
| இந்து பண்டிகைகள் | கிறிஸ்தவ பண்டிகைகள் | இஸ்லாமிய பண்டிகைகள் |




















