உங்களின் ராசியை குரு பார்க்கிறார். அதேசமயம் செவ்வாயும் தனது 4ம் பார்வையால் பார்க்கிறார். குருபார்வையால் அறிவார்ந்த விஷயங்களில் ஈடுபாடும், நாட்டமும் ஏற்பட்டு நற்பலன்களை பெறுவீர்கள். இந்த வாரம் போட்டிகள் நிறைந்ததாக அமையக் கூடும். 2ம் வீட்டில் இருக்கும் ராகு தங்களுக்கு நிச்சயம் தனலாபத்தை தருகிறார். 4ம் தேதி மட்டும் சற்று சரியில்லை. உடல்நலத்தில் குறிப்பாக வயிற்று உபாதையில் கவனம் வையுங்கள். 5, 6 தேதிகளில் செயலில் கவனம் தேவை. காரியங்கள் கைநழுவிப் போகலாம். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கப் பெறாமல் போகலாம். 7ம் தேதி முக்கியமான முடிவுகளையும், முதலீடுகளையும் தவிர்த்து விடுங்கள். 8ம் தேதி காலை 8.30 மணி முதல் 10ம் தேதி இரவு வரை சுபிட்சமான காலமாக அமையும். தொழில் மற்றும் பணி முயற்சிகளில் வெற்றி நிச்சயம் உண்டு. 5ம் வீட்டில் குரு இருப்பதால் குழந்தைகளின் நலம் மேன்மை பெறும். குடும்பத்தில் அமைதி, நற்பெயர், பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரம்:
போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் பெற, தினமும் ஓம் ஸ்ரீ புத்தி மதே நமஹ என்று உச்சரித்து அர்ச்சித்து வாருங்கள். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
|




