லாப வீட்டில் சூரியன் சாதகமாக அமைந்திருப்பதால் தடைபட்ட வேலைகள் உடனே முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் மகனுக்கு திருமணத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 3ல் சனி பலமாக இருப்பதால் எதிர்பார்த்த பதவி தேடி வரும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சிஉண்டு.
ராசிக்கு 6ம் வீட்டில் ராகு வலுவாக அமைந்திருப்பதால் வெளிவட்டாரப் பழக்கம் சிறப்பாக இருக்கும். புதன் சாதகமாக இருப்பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு கசந்த காதல் இனிக்கும். நீசமாகிக் கிடந்த செவ்வாய் மே 28ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் மன நிம்மதி கிட்டும். வீடு, மனை வாங்குதல், விற்பதில் இருந்த பிரச்னைகள் விலகும். ராசிக்கு 9ம் வீட்டில் நிற்கும் குருவால் வேற்று மதத்தினர், வி.ஐ.பிகள் உதவுவார்கள். அயல்நாட்டுப் வாய்ப்புகள் தேடி வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தாயாரின் உடல்நிலை சீராகும். வீடுகட்ட லோன் கிடைக்கும். பழுதான டிவி, ப்ரிட்ஜை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வெகுகாலமாக போக நினைத்தும் முடியாதிருந்த குலதெய்வக் கோயிலுக்கு இப்பொழுது சென்று வரு வீர்கள். மாணவர்களின் நினைவுத்திறன் பெருகும்.
வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஏற்றுமதி&இறக்குமதி வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாக வியாபாரம் முன்னேற்றம் தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களோடு இருந்த பிரச்னை நீங்கும்.
மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். கலைஞர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும். விவசாயிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் மாதமிது.
ராசியான தேதிகள்: மே 15, 16, 21, 22, 24, 25, 30, 31, ஜூன் 1, 2, 9, 12.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 3ம் தேதி நண்பகல் முதல் 4, 5 ஆகிய தேதிகளில் நிதானமாக செயல்படுங்கள்.
பரிகாரம்: திருத்தணி முருகப்பெருமானை மனதார வணங்குங்கள்.
ஏழைச் சிறுவர்களின் கல்விக்கு உதவுங்கள்.
|





