Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Font | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema


நேர்மறை எண்ணங்களும், எதிர்மறை எண்ணங்களும் கொண்ட நீங்கள், தன் உழைப்பில் மற்றவர்களை வாழ வைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், வசதி வாய்ப்பையும் கொடுத்து வந்த  குருபகவான் இப்பொழுது 15.12.2009 முதல் விரய வீட்டிற்குள் நுழைவதால் கொஞ்சம் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை போட வேண்டாம். மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப்போங்கள். குடும்ப விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென நினைத்த புண்ணிய தலத்திற்கு சென்று வருவீர்கள். நண்பர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்ல வேண்டாம். யோகா, தியானம் செய்யுங்கள்.

4.5.2010 முதல் 6.11.2010 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். மருத்துவச்செலவுகள், மனதிற்கு பிடித்தமானவர்களின் இழப்பு, சிறு சிறு ஏமாற்றங்கள் வந்து நீங்கும். இக்காலகட்டத்தில் போதைப்பொருட்களைத் தவிர்க்கப்பாருங்கள்.

குருபகவான் உங்கள் சுகஸ்தானமான  4ம் வீட்டைப்பார்ப்பதால் சாலையை கடக்கும் போதிருந்த வாகன பயம் நீங்கும். பழுதான வாகனம் ஓடும். தாயாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். நகரத்திற்கு வெளியே வாங்கியிருந்த  இடத்தை விற்று நல்ல இடத்தில் வீடு வாங்குவீர்கள். தவறான பாதையிலிருந்து மாறுவீர்கள். குரு 6ம் வீட்டைப் பார்ப்பதால் எதிரிகளின் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல் திட்டம் தீட்டுவீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். கால்வலி, இடுப்பு வலி குறையும். குரு 8ம் வீட்டைப் பார்ப்பதால் அடிக்கடி பயணங்கள் இருக்கும். வடமாநிலத்தவர்கள் உதவுவார்கள். அரசு விஷயங்கள் முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் தனபாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். பணம் வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். ஆபரணங்கள் சேரும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பழுதாகியிருந்த டி.வி., பிரிட்ஜ் மாற்றுவீர்கள். சிலர் புது வீட்டில் குடிபுகுவார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான  குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய  குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் படபடப்பு, முன்கோபம், காரியத்தடைகள் வந்து நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டுப்பயணம் அமையும். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள  காலகட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிக்குள் நிற்பதுடன், உங்களின் லாபவிரயாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் தூக்கமின்மை, உடல் சோர்வு, சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச்செலவு அதிகரிக்கும். வழக்குகளில் கவனம் தேவை.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. பலவகையில் கடன் வாங்கி புது முதலீடு செய்வீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். கமிஷன், உணவு, ஏஜென்சி மூலம் பணம் வரும். இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிக லாபம் கிடைக்கும். புது ஏஜென்சிகளையும் எடுப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். இரும்பு, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வந்து நீங்கும்.

உத்யோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மூத்த  அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம்; பகையும் வேண்டாம். உயரதிகாரி உங்கள் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பார். ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்காதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வேலை நிமித்தமாக  பெற்றோரை விட்டு பிரிய வேண்டியிருக்கும். கல்யாணம் நினைத்தபடி முடியும்.

மாணவர்களே! கணிதம், மொழிப்பாடங்களுக்கு அதிக  நேரம் ஒதுக்குங்கள். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்குங்கள்.

கலைஞர்களே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப்பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.

விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்துவதாக நினைத்து போலி விதைகளை வாங்கி ஏமாற வேண்டாம்.

அரசியல்வாதிகளே! புது பதவிக்கு ஆசைப்படாதீர்கள். இருப்பதை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
இந்த  குரு பெயர்ச்சி தொலைநோக்குச்சிந்தனையாலும், மாறுபட்ட  அணுகுமுறையாலும் ஓரளவு வளர்ச்சியை தரும்.

பரிகாரம்:

விருத்தாசலம் அருகிலுள்ள மணவாளநல்லூரில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானான கொளஞ்சியப்பரை வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

தினகரன் முதல் பக்கம் முந்தைய பக்கம் அடுத்த பக்கம் ஜோதிடம் முதல் பக்கம்


 
 
 
Copyright 2010 all rights reserved to Kungumam Publications Private Limited
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?