Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Font | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema


நீரோட்டத்திற்கு எதிர் திசையில் செல்லும் மீன்களைபோல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிப்பதில் வல்லவர்கள் நீங்கள். ஆகாயக்கோட்டை கட்டாமல் யதார்த்தமாக யோசிப்பீர்கள். தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு முன் அதனால் ஏற்படப் போகும் நல்லது, கெட்டதை அலசுவீர்கள். உயிர் நண்பனாக  இருந்தாலும் ஒழுக்கம் தவறினால் உதறித் தள்ளுவீர்கள். அப்படிப்பட்ட  உங்களுக்கு 15.12.2009 முதல் 21.11.2010 வரை உள்ள கால கட்டத்தில் குருபகவான் என்ன  செய்யப் போகிறார்?

இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நீச்சம் பெற்று அமர்ந்து கடுமையான  செலவுகளையும், ஏமாற்றங்களையும் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகளையும் வீண் சந்தேகங்களையும் தந்த குருபகவான் இப்போது உங்களின் யோக  வீடான  9ம் வீட்டில் அமர்வதால் தொட்டது துலங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிரபலங்களுடன் இருந்து வந்த  மனத்தாங்கல் நீங்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அடகிலிருந்த  நகைகளை மீட்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். விலகி நின்ற உறவினர்கள், நண்பர்கள் வலிய  வந்து பேசுவார்கள். கஷ்டப்பட்டு உழைத்த காசையும் வெளியில் கொடுத்து ஏமாந்தீர்களே! இனி அந்தப்பணம் கைக்கு வரும். தவறு செய்யாமலேயே தண்டனை அனுபவித்தீர்களே! அந்த அவலநிலை மாறும். சில வி.ஐ.பிகள் உங்களுக்கு உதவுவதாக  சொன்னார்கள். ஆனால், நேரில் சென்று பார்த்தபோது ஒதுக்கித் தள்ளினார்களே! இனி அவர்களும் வியக்கும்படி சாதனை புரிவீர்கள்.

15.12.2009 முதல் 3.5.2010 முடிய உள்ள காலகட்டங்களில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். அதிகமாக உழைத்தும், சேமிக்க முடியாதபடி செலவுகள்தானே இருந்தது? இனி அந்த  அவலநிலை மாறும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிரிந்திருந்த  கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். சொத்து சம்பந்தப்பட்ட  பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நல்ல  வேலையில் அமர்வீர்கள். சொந்த ஊரில் இழந்த  செல்வாக்கை அடைவீர்கள்.

குடும்பத்தினருடன்  கொஞ்சம் ஒதுங்கியிருந்தீர்களே! இனி ஒற்றுமை பிறக்கும். சின்ன  சின்ன வேலைகளை முடிப்பதில்கூட சிக்கல்கள் வந்ததே! இனி முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகனப்பழுது நீங்கும். வெகுநாட்களாக  போக வேண்டுமென்று நினைத்திருந்த கோயிலுக்குச்சென்று வருவீர்கள். நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உதவுவார்கள். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். அண்டை அயலார் உதவுவார்கள்.

குருபகவான் ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் சோர்ந்திருந்த  உங்கள் முகம் மலரும். சுறுசுறுப்படைவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். சருமநோய் குணமாகும். 7ம் பார்வையால் மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் தைரியம் பிறக்கும். இளைய சகோதர வகையில் உதவி உண்டு. அவரே 9ம் பார்வையால் 5ம் வீட்டை பார்ப்பதால் கனவுத்தொல்லைகள், தூக்கமின்மை, யார் மீதும் நம்பிக்கை இல்லாத நிலை நீங்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய  உங்கள் ரோக மற்றும் லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்களும் செலவுகளும் ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புதுவீடு, மனை வாங்குவீர்கள். அரசுக் காரியங்களில் வெற்றி கிட்டும். தாயாருடன் இருந்த மோதல்கள் நீங்கும். உறவினர்கள் சிலர் வலிய வந்து உறவாடுவார்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும்-.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிதாக டி.வி.,பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல  தீர்ப்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வேற்று மதத்தினரால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்தில் இருந்த  வில்லங்கம் விலகும். மகனுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் சப்தம ஜீவனாதிபதியான  குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கைமாற்றாக  கொடுத்த  பணத்தை வசூலிப்பீர்கள். சொந்த  ஊரில் மதிக்கப்படுவீர்கள். இளைய சகோதரர் உதவுவார். மகளுக்கு நல்ல  வரன் அமையும்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய  குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சென்று அமர்வதால் பெயர், புகழ், கௌரவம் குறையும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வாகன விபத்துகள், உத்யோகத்தில் வீண்பழி, வி.ஐ.பிகளுடன் மோதல்கள், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உறவினர்களுடன் உரசல்கள் வந்து நீங்கும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் அஷ்டம, பாக்யாதிபதியான  சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் உடல் அசதி, சோர்வு, அல்சர் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக  கையாளுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். இக்காலகட்டத்தில் குருபகவான் 10ம் வீட்டில் செல்வதால் கௌரவப் பதவிகள் தேடிவரும். ஆனால் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் வரும். தந்தையாருடன் கருத்துமோதல் ஏற்படும். சொத்து வாங்கும்போது பத்திரத்தை பரிசோதித்துப்பார்த்து வாங்குங்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற நல்ல  வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். வாடிக்கையாளர்களை கவர  சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய  நிறுவனத்துடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ரியல் எஸ்டேட், ஹோட்டல், எலக்ட்ரிகல்ஸ், சிமென்ட், மணல், கம்பி மூலம் லாபம் வரும். மார்ச், ஏப்ரல், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகத்தில் ஏற்பட்ட அவமானங்கள் நீங்கும். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும் அளவிற்கு அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மார்ச்,ஏப்ரல் மாதங்களில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. அலுவலகத்தில் உங்களை சிலர் சண்டைக்காரர்களாக பார்த்தார்களே! இனி சந்தோஷமாக  பேசுவார்கள். ஆனால் 4.5.2010 முதல் 6.11.2010 வரை உங்களின் உத்யோகஸ்தானத்தில் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளுடன் மனத்தாங்கல் வரும். சிலருக்கு இடமாற்றம் வரும்.

கன்னிப் பெண்களே! காதல் கனிந்து வரும். ஊரே மெச்சும்படி கல்யாணம் நடக்கும். தோற்றப்பொலிவு கூடும். உயர்கல்வியை நல்ல  விதத்தில் முடிப்பீர்கள். மாதவிடாய்க்கோளாறால் ஏற்பட்ட வயிற்றுவலி நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். நீங்கள் விரும்பியதை வாங்கி தருவார்கள்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் இருந்த மறதி, அலட்சியம் இனி விலகும். ஆர்வம் பிறக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பீர்கள். உங்களை விட்டு விலகிய  நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். ஓவியம், இசை, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் அன்பை பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு, பழைய நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். கிசுகிசுத் தொல்லைகள் குறையும்.

விவசாயிகளே! சூரியகாந்தி, எள், ஆமணக்கு, நிலக்கடலை உள்ளிட்ட  எண்ணெய் வித்துக்கள் மூலம் அதிக ஆதாயமடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் நண்பர்களாவார்கள். தலைமையின் குடும்ப விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

இந்த  குரு பெயர்ச்சி வருமானத்தையும், வசதி, வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்வதுடன் புதிய முயற்சிகளில் வெற்றியையும் அள்ளித்தரும்.

பரிகாரம்:

துருவனுக்கும், ஆதிசேஷனுக்கும் காட்சி கொடுத்த நாகப்பட்டினம் சௌந்தரராஜப் பெருமாளையும் தாயார் சௌந்தர்யவல்லியையும் வணங்கி விட்டு வாருங்கள். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைக்கு உதவுங்கள்.
 


தினகரன் முதல் பக்கம் முந்தைய பக்கம் அடுத்த பக்கம் ஜோதிடம் முதல் பக்கம்


 
 
 
Copyright 2010 all rights reserved to Kungumam Publications Private Limited
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?