கொல்கத்தா: கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை நேற்று வீழ்த்தியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசியது. பெங்களூர் தொடக்க வீரர்களாக காலிஸ், கோஸ்வாமி களமிறங்கினர். கோஸ்வாமி 8, பாண்டே 0, கோஹ்லி 2 ரன்னுடன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பெங்களூர் அணி தடுமாறியது.
மார்கன் 10, டிராவிட் 21, உத்தப்பா 20 ரன் எடுத்தனர். பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. காலிஸ் 65 (52 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பிரவீன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் மேத்யூஸ் 4 (4&0&19&4), முரளி கார்த்திக் 2, லாங்கவெல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஹாட்ஜ் & திவாரி ஜோடி சிறப்பான தொடக்கத்தை (11.4 ஓவர், 101 ரன்) கொடுத்தது. அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். திவாரி 50 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹாட்ஜ் 50 ரன் (45 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கங்குலி 23 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
கொல்கத்தா 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகன்: மனோஜ் திவாரி.




