Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Rss Feed | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema

நீலகிரி மாவட்டம்

கோத்தகிரியில் அறிவியல் வினாடி வினா போட்டி


குன்னூர் : கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கோத்தகிரி ஜே.சி.ஐ சார்பில் துளிர், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ வரவேற்றார். நடுநிலை பள்ளி பிரிவில் கோத்தகிரி விஸ்வசாந்தி மெட்ரிக் பள்ளியும், கேரடாமட்டம் அரசு நடுநிலை பள்ளியும் முதலிடம் பிடித்தது.
கோத்தகிரி ஹோம் பள்ளி, புனித அந்தோணியர் பள்ளி இரண்டாம் இடத்தையும், கேர்கம்பை ஹில்போர்டு, சக்கத்தா அரசு நடுநிலை பள்ளி ஆகியவை மூன்றாம் இடம் பிடித்தன.இடைநிலை பள்ளி பிரிவில் கோத்தகிரி புனித மரியன்னை மேல்நிலை பள்ளி, ஹோம் பள்ளி ஆகியவை முதல் இரண்டு இடங்களை பிடித்தது. மேல்நிலை பிரிவில் செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி முதலிடம், பாண்டியராஜ் மெட்ரிக் பள்ளி, அரசு மேல்நிலை பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
இந்த இரு இடங்களை பெற்ற பள்ளிகள் வரும் 31ம் தேதி ஊட்டியில் நடைபெறும் மாவட்ட அளவிலான ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டியில் பங்கேற்கின்றனர். வரும் 6ம் தேதி கோத்தகிரி லூக் தேவாலாயத்தில் இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ,மாணவிகளுக்கு ஜே.சி.ஐ வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று பரிசு, சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெள்ளி, ஜே.சி.ஐ திட்டக்குழு தலைவர் நாகராஜ், நிர்வாகிகள் ராஜ்குமார், நஞ்சுண்டன், வைரமணி, வசந்த், அக்பர் அலி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

 

வால்பாறை, நீலகிரியில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை :நீலகிரி மற்றும் வால்பாறை அடை மழை தொடர்வ தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 4 நாட்களாக அடை மழை பெய்கிறது. வால்பாறையில் 60, சோலையாறு அணையில் 62, கீழ் நீராறு அணையில் 65, மேல்நீராறு அணையில் 100 மி.மீ மழை பெய்துள்ளது.
தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் பலர் வைரஸ் கிருமி தாக்குதலால், காய்ச்சல், இருமல், சளியால் அவதிப்படுகின்றனர். தண் ணீரை காய்ச்சி குடிக்க நக ராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வால்பாறையிலுள்ள நீரோடைகள், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்துள்ளது. சோலையார் அணைக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை வினாடிக்கு 1500 கன அடி நீர் வந்தது. தற்போது 2500 கனஅடி நீர் வருகிறது. கடந்த 2 வாரத்தில் அணை யின் நீர்மட்டம் தினசரி ஒரு அடி வீதம் உயர்ந்தது. நேற்று காலை மொத்த நீர்மட்டமான 165 அடியில் 101.83 அடியை எட்டியது.
வினாடிக்கு 1500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு அணையிலுள்ள 2 நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை யில் சோலையார் அணை 165 அடி நிறைந்து 20 நாட்கள் முழு கொள்ளளவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன் னூர், கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 நாளுக்கு முன்பு வரை வீசிய சூறாவளி ஓய்ந்தது. நேற்றுமுன்தினம் முதல்  மழை பெய்கிறது. கூடலூரில் 77, தேவாலா 88 மி.மீ, நடுவட்டம் 76.5, கிளன் மார்கன் 64, ஊட்டி 27, அவலாஞ்சி 24.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மழையால் கூட லூர் அருகேயுள்ள அய்யன்கொள்ளி&கையுண்ணி சாலையில் நேற்று அதி காலை மூங்கில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

 

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செப்டம்பரில் கணினி மயம்

ஈரோடு : தமிழகத் தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் செப்டம்பரில் கணினி மயமாக்கப்பட உள்ளதையடு த்து கோவை மண்டலத்தில் உள்ள 67 ஊழியர்களுக்கு சென்னையில் மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பணி துரிதமாக நடைபெறும் வகையிலும் பதிவு மூப்பு முறை மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை இண்டர்நெட் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து  வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்படும் என்று கடந்த ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து ஒவ்வொரு மண்டலமாக வேலைவாய் ப்பு அலுவலகங்களில் கணினிமயமாக்கும் பணி நடந்து வருகிறது. கோவை மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கணினி மயமாக்குவதற்கான கட்டமைப்பு பணி முடிக்கப்பட்டு விட் டது. இதனையடுத்து, ஒவ் வொரு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் கம்ப்யூட்டர்கள்,  ஸ்கேனர்கள், பிரிண்டர்கள் உள்ளிட்டவைகள் பொருத்தும் பணி  நடக்கிறது. மாநிலம் முழுவ தும் பணிகள் முடிவடைந்து வருகின்ற செப்டம்பர் மாதம் முற்றிலும் கணினி மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மண்டல கட்டுப்பாட்டில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் உள்ள வேலைவாய்ப்பு உதவி அலுவலர்கள், அலுவ லக உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்ளிட்ட 67 ஊழியர்களுக்கு சென்னை யில் இன்று 29ம் தேதி முதல் 31 வரை மூன்று நாட்க ளுக்கு கணினி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

 

மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : கடந்த 4 நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், தேவாலா, நடுவட்டம், கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்கிறது. கூட லூர், தேவாலாவில் அதிகபட்சமாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்ததால் நேற்று கூடலூர், பந்தலூர் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.காற்றுடன் கூடிய மழை காரண மாக ஊட்டி & கூடலூர் சாலையில் பைக்காரா வனத்துறை அலுவலகம் அருகே சாலையோர ராட்சத கற்பூர மரம் நேற்று சாலையின் நடுவே விழுந்தது. இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர், பந்தலூர், கர்நாடக மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் அரசு பஸ்கள் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டது. 1 மணி நேரத்திற்கு பின் சாலையின் நடுவே விழுந்து கிடந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பின்னரே போக்குரவத்து துவங்கியது.

 

ஜீப் மீது லாரி மோதல் 8பேர் காயம்

ஊட்டி : ஊட்டியில் இருந்து கூடலூருக்கு பெண் பார்ப்பதற்காக பாசு(37), அவர் மனைவி ஜெயகு னிஷா(30) மற்றும் உறவினர்களான பஷீர்(24), பாஷா(38), முபாரக் (12), ஆயிஷா(10), சிராஜூதீன்(8), சுதீர்(22) ஆகியோர் ஜீப் மூலம் சென்றனர். அனுமாபுரம் சென்ற போது எதிரே வந்த லாரி ஜீப் மீது மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்த 8 பேருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து நடுவட்டம் போலீசார் விசாரிகின்றனர்.

 

அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கவுன்சிலர்கள் இருவர் வெளிநடப்பு


குன்னூர் : அடிப் படை வசதிகளை செய்ய தவறியதாக கூறி  நகராட்சி கூட்டத்தில் இருந்து 2 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
சாந்தா(திமுக): ஹவுசிங் யூனிட் மேல் பகுதி நகராட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னரும் பணி துவக்கப்படவில்லை. ஏற்கனவே இப்பகுதியிலுள்ள அபாயகரமான கிணற்றை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கிணற்றின் அருகேயுள்ள தடுப்புகள் உடைக்கப்பட்டதால் அபாயம் நீடிக்கிறது. கிணற்றில் முட்புதர்கள் சூழ்ந்திருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.
தலைவர்: நகராட்சி ஒப்பந்ததாரர்கள் முதலில் எடுத்த பணியை நிறைவு செய்த பின்னரே அடுத்துள்ள பணியை  துவக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இப்பகுதியில் தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.
கலையரசி(அதிமுக): கன்னி  மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் நடமாடி வருகிறது. நடைபாதை, தெரு விளக்கு வசதி இல்லாததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
தலைவர்: இந்த வார்டுக்கு மட்டும் ரூ.95 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு விரைவில் பணி மேற்கொள்ளப்படும்.
ரங்கநாதன் (திமுக): போயர் காலனியில் நடைபாதை துண்டிக்கப்பட்டு 3 ஆண்டு ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குன்னூர் மவுண்ட்ரோடு சாலையில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்படுவதால் லெவல் கிராஸ் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும். அரசு உத்தரவுப்படி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 3400 பயனாளிகளுக்கு விரைவில் இலவச வீட்டு மனைகளை வழங்க வேண்டும்.
தலைவர்: மேம்பாலம் கட்டுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குன்னூர் பகுதியில் குடிசை ஏதும் இல்லை. எனினும் மத்திய அமைச்சரின் ஆலோசனைப்படி தகர மற்றும் ஓடுகளால் வேயப்பட்ட குடியிருப்புகள் இத்திட்டத்தில் இணைத்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மணி (அதிமுக): ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகர பகுதியில் எத்தனை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அடிப்படை தேவைஎந்த அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தலைவர்: ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 221 வீடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணியை வீட்டு உரிமையாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மகளிர் குழுக்களுக்கு தரமதிப்பீடு முகாம் துவக்கம்

ஊட்டி : மகளிர் குழுக்களுக்கு இன்று துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை அந்தந்த வட்டங்களில் தரமதிப்பீடு முகாம் நடக்கிறது.
 மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் தன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள சுய உதவி குழுக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வங்கி கிளை மேலாளர், அரசு சாரா அமைப்புகள் உதவியுடன் தரமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஜூலை 2010 மாதத்திற்கான தரமதிப்பீடு மாவட்டத்திலுள்ள  4 வட்டாரங்களில் வரும் 27ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது.
27ம் தேதி ஊட்டி வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு ஊட்டி ஊராட்சி ஒன்றிய கூட்ட அறையிலும், 29ம் தேதி குன்னர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அறையில் நடக்கிறது.
 30ம் தேதி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய கூட்ட அறையிலும், அக்டோபர் 2ம் தேதி கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அறையிலும் தரமதிப்பீடு முகாம் நடந்தது.
தரமதிப்பீட்டின் போது மாவட்டத்தில் சுய உதவி குழு அமைக்கப்பட்டு 6 மாத காலம் கடந்தும் இதுவரை தர மதிப்பீடு செய்யப்படாத மகளிர் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற, பதிவு பெறாத சுய உதவி குழுக்கள் தவறாது கலந்து கொண்டு பயனடையலாம்.
 தர மதிப்பீட்டின் போது வங்கி மேலாளர்களும் கலந்து கொள்ள வேண் டும்.

 

ஒற்றை தந்த காட்டு யானை குடியிருப்பில் அட்டகாசம்

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் காமராஜ் நகரில் வசிப்பவர் அம்சா(33). கூலி தொழிலாளி. நேற்று அதிகாலை சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியே வந்தபோது, அங்கு நின்ற  காட்டு யானை இவரை தாக்கியது.   வீட்டிலுள்ளவர்கள், அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் மின் விளக்குகளை எரிய விட்டு யானையை விரட்டினர். அம்சாவை கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். யானை தாக்கியதில் அவருக்கு கால், நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது.
 நேற்று முன் தினம் மேல் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே வசிக்கும் பிலோமினா  வீட்டை ஒற்றை தந்தமுள்ள காட்டு யானை இடித்தது. பின்புற கதவை யானை பலமாக தாக்கியதால் வீட்டில் பின்புற பகுதி சேதமானது. வீட்டில் இருந்தவர்கள் வேறு அறையில் புகுந்து கொண்டதால், உயிர் பிழைத்தனர்.
சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்றது. இந்த யானை,  மேல் கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் நடமாடுவதுடன் வாழை, பலா போன்ற பயிர்களை சாப்பிட்டும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருகிறது.
 கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையை கடக்கும் வாகனங்களையும் விரட்டி வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் சில்வர் கிளவுட் எஸ்டேட் பகுதியில் இதே யானை சுற்றி திரிந்தது. அங்கு ஏற்கனவே காவலா ளியை அடித்து கொன்றது.
அப்போது வனத்துறையினர் கும்கி யானை மூலம் இதை விரட்டினர். மீண்டும் இதை கும்கிகளை கொண்டு விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

இலவச வீட்டுமனைப்பட்டா கோரி கிராம பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி : கிராம கோயில்களில் பணியாற்றி வரும் அனைத்து பூஜாரிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம கோயில்களில் பணியாற்றி வரும் அனைத்து பூஜாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இறந்த போன பூஜாரிகளின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு வழங்கி வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி வரும் காலங்களில் ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவதற்காக மனு செய்தால் வருவாய்த்துறையினர் ரூ.24 ஆயிரம் ஆண்டு வருமானம் உள்ளதாக சான்று அளிக்கின்றனர்.
ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரம் உள்ள பூஜாரிகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்குகிறது. இதனால், பல பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் ரூ.12 ஆயிரத்திற்கு ஆண்டு வருமானத்திற்கான சான்று வழங்க வேண்டும். அரசு கட்டுபாட்டிலுள்ள கோயில்களில் பணியாற்றும் பூஜாரிகளுக்கும் அனைத்து பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அனைத்து நல வாரிய உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். ஒரு கால பூஜை திட்டத்திற்கான நிதியுதவியை ரூ.1 லட்சமாக உயர்த்தி டெபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை நித்ய பூஜைக்கு வழங்க  வேண்டும்.
அனைத்து கிராம கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம கோயில் பூஜாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அமைப்பாளர் சேகர் தலைமை வகித்தார். வி.எச்.பி. மாநில பொது செயலாளர் குமரன் முன்னிலை வகித்தார்.

 

பக்காசூரன் காட்சிமுனைக்கு தார் சாலை கோரி ஆக.8ல் மறியல் செய்ய முடிவு

குன்னூர் : பக்காசூரன் காட்சி முனைக்கு செல்ல தார் சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரி அரசியல் கட்சிகள் வரும் 8ம் தேதி சாலை மறியலில் ஈடுபட தயாராகி வருகின்றன.
 குன்னூரில் இருந்து 17 கி.மீ தொலைவிலுள்ள பக்காசூரன் காட்சி முனை சுற்றுலா தலமாக கடந்த சில ஆண்டுக்கு முன் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. அப்போது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம், மலைப்பகுதி மேம்பா ட்டு திட்ட நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  காட்சி முனைக்கு செல்லும் ட்ரூக் சாலையை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனியாருக்கு சொந்தமான பகுதி வழியாக காட்சி முனைக்கு தார் சாலை அமை க்க வேண்டும் என்ப தால் இது தொடர்பாக தனி யார் தோட்ட நிர்வாகத்துடன் பேசி ஒப்புதல் பெறப்பட் டது. ஆனால் இதற்கு பல்வேறு நிபந்தனைகளை தனியார் தோட்ட நிர்வாகம் விதித்ததாக கூறப்படுகிறது.
தார் சாலை அமைக்க அனுமதி பெறுவதில் இழுபறி ஏற்பட்டதால் சாலை மேம்பாட்டுக்கான நிதி திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு குன்னூர் எம்.எல்.ஏ சவுந்திர பாண்டியன், மாவட்ட வரு வாய் அலுவலர் குப்பு சாமி ஆகியோர்  எஸ்டேட் பொது மேலாளர் மேத்தாவுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. சாலை அமைக்க மீண்டும் தோட்ட நிர்வாகம் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக வருவாய் துறை சார்பில் அளவீடு செய்யும் பணி துவக்கப்பட்டது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தொகையை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டது. சாலை அமைக்கும் நில அளவீடு பணிக்காக வருவாய் துறையி னர்  தனியார் தோட்ட நிர்வாக பகுதிக்கு சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தனியார் தோட்ட நிர்வாகம் விதித்த நிபந்தனைகளை ஏற்று கொண்டால் மட்டுமே சாலை அமைக்க அனுமதிக்கப்படும் என்று தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலை மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் இவ்வழிதடத்தில் 5 கி.மீ தூரம் குண்டும், குழியு மான சாலையை ஆதிவாசி மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சாலை மேம்பாட்டு பணியை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 8ம் தேதி பொது நல அமைப்புகள், அரசியல் கட்சி கள் சார்பில் குன்னூர்& மேட்டுப்பாளையம் சாலை யில் காட்டேரி ஜங்ஷன் என்ற இடத்தில் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

 

விலை பகிர்வு அமலானது முதல் நிலுவை தொகை வழங்க வேண்டும்

குன்னூர் : விலை பகிர்வு திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து பசுந்தேயிலைக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொ கையை தேயிலை வாரியம் விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும் என்று சிறு தேயி லை விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் பசுந்தேயிலை விலை சரிந்து வருவதால் சிறு தேயிலை விவசாயிகள் பெரிதும் பாதித்து வருகின்றனர். எனவே பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட சிறு விவசாயிகள் மற்றும் மகளிர் சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் நேற்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் பெள்ளி தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ், கோத்தகிரி ஒன்றிய அதிமுக செயலாளர் தேனாடு லட்சுமணன், மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் போஜன், வழக்கறிஞர் சுப்பிரமணியம், ராஜூ பெள்ளி, பெள்லு, மாவட்ட விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி கண்ணம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பசுந்தேயிலைக்கு குறை ந்த பட்சமாக ரூ.25 விலை நிர்ணய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் போது கோஷங்கள் எழுப்பபட்டது. பின்னர் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.  
கடந்த 2000ம் ஆண்டு நடந்த பசுந்தேயிலைக்கு விலை கோரும் போராட்டத்தின் போது கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பசுந்தேயிலை விலை கிலோ வுக்கு ரூ.15க்கு குறைவாக கிடைக்கும் பட்சத்தில் மத்திய, மாநில அரசு சார்பில் கிலோவுக்கு தலா ரூ.2 வரை மானியம் வழங்கப்படும் என்று  உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் இதனை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை. தேயிலை வாரியத்தின் 65:35 என்ற விலை பகிர்வு திட்டம் கடந்த ஓராண்டாக அமல்படுத்தவில்லை. இதனை அதிகாரிகள் கண்காணிக்க தவறி விட்டனர்.இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை தேயிலை வாரியம் பெற்று கொடுக்க வேண்டும்.
உயர்தர, சாதாரண ரகம் என பசுந்தேயிலையை தரம் பிரிக்க கூடாது. சமீபத்தில் தேயிலை மகசூல் அதிகரித்ததால் பெரும்பாலான ஆலைகளில் பசுந்தேயிலை யை வாங்க மறுத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள், லட்சகணக்கான கிலோ பசுந்தேயிலையை சாலையில் கொட்டினர். மத்திய, மாநில அரசுகள் இந்த 4 மாத காலத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
சீசன் காலங்களில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் மூடப்பட்ட கூட்டுறவு ஆலைகளை திறக்க வேண்டும். தேயிலை வாரியம் சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் தழு விய பல்வேறு போராட்டம் நடைபெறும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

கத்தியை காட்டி நகை பறித்த 2 கொள்ளையர் சிக்கினர்

கத்தியை காட்டி நகை பறித்த கொள்ளையர் கள் இருவர் பொதுமக்களிடம் சிக்கினர்.
திருப்பூர், ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (30). இவர் காங்கயம் ரோடு, ராக்கியபாளை யம் பிரிவில் நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்த போது பைக் கில் வந்த இருவர், இவரிடம் கத்தி யை காட்டி மிரட்டி தங்க செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அதிர்ச்சியடைந்த யோகான ந்த் சத்தமிட்டதையடுத்து அப்பகுதியினர் இருவரையும் பிடித்து போலீ சில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ரூரல் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (32), திருப்பூர், சாமுண்டிபுரத்தை சேர்ந்த கண்ணன் (22) என் பது தெரியவந்தது.
அவர்கள் வந்த பைக் திருட்டு பைக் என்பதும், திருப்பூர் வடக்கு காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதி யில் திருடியது என்பதும் தெரியவந்தது. அனுப்பர்பாளையத்தில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றிலும் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, பைக், டி.வி.டி. உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

திருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்தில் இன்று (23ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால் இந்த மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம்பாளை யம், சேர்மன் கந்தசாமி நகர், நேதாஜிநகர், ரங்க நாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்குநகர், அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானிநகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்குமெயின்ரோடு, வ.உ.சி.நகர், டி. எஸ்.ஆர்.லே&«வுட், முத்து நகர், பிரிட்ஜ் வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே. புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட் டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திராகா லனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும்.
இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

ஊத்துக்குளி அருகே பரபரப்பு தோட்டத்து பணியில் ஈடுபட்ட பெண்கள் வாந்தி, மயக்கம்

ஊத்துக்குளி அருகே தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கிய தால் பரபரப்பு ஏற்பட்டது. 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளி செல்லும் பகுதியில் குமாரசாமி (47) என்பவருக்கு சொந்தமான தோட் டம் உள்ளது.
இந்த தோட்டத்தை அவரது உறவினர் பழனிவேல் என்பவர் கவனித்து வருகிறார். தோட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. தோட்டத்தில் களை எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு திருச்செங்கோட்டில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்படுவது வழக்கம்.
2 அல்லது 3 நாட்கள் இங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள்.
அதன்படி கடந்த இரு தினங்களாக களை எடுக்கும் பணியில் 20க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை வழக்கம்போல் காலை உணவை உட்கொண்டு பணிக்கு வந்த பெண்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கினர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாந்தி, மயக்கத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அவர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
 திருச்செங்கோடு அருகே உள்ள திருமங்கலம் மற்றும் சின்னதம்பிபாளையம் பகுதியை சேர்ந்த கனகா (22), ஜோதி (23), வெண்ணிலா (35), ஜோதி (25), சந்தியா (21), கமலா (28), தனலட்சுமி (30), சரோஜா (40), சரசு (37), ராஜேஸ்வரி (28), ராஜம் மாள் (35), பழனியம்மாள் (37), சரஸ்வதி (30), பழனியம்மாள் (30), செல்வி (37), லோகப்பிரியா (20), செந்தாமரை (26) ஆகிய 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காலையில் உட்கொண்ட உணவு ஒவ்வாமல் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

உழவர் சந்தைக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை

குன்னூர்கோத்தகிரி உழவர் சந்தை சிறப்பாக செயல்பட பஸ் வசதி செய்ய வேண்டும். இல்லையெனில் உழவர் சந்தையை மாற்றி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கு முன் கோத்தகிரியில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்து விளை பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்து வந்தனர். துவக்க காலத்தில் உழவர் சந்தை வரை அரசு மற்றும் மினி பஸ் இயக்கப்பட்டது. அதன்பின் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் சிறு விவசாயிகள், நுகர்வோர் பங்களிப்பு குறைய துவங்கியது.
போதிய வரவேற்பு இல்லாததால் இந்த உழவர் சந்தை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்குள்ள 24 கடைகளில் 8 கடைகளில் மட்டுமே விவசாயிகள் நிரந்தரமாக வருகின்றனர். மீதமுள்ளவை காலியாகவே உள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள், தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:
கோத்தகிரியில் நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் உழவர் சந்தை அமைந்துள்ளது. ராம்சந்த், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நுகர்வோர் நடந்து வர சிரமப்பட்டு தனியாரிடமே காய்கறிகளை வாங்கி கொள்கின்றனர்.
மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் விற்பனையாகும் விலைக்கு காய்கறிகளை கோத்தகிரியில் விற்பனை செய்தாலும் கூட நுகார்வோரிடம் எவ்வித வரவேற்பும் இல்லை. பஸ் வசதி இல்லாததே இதற்கு காரணமாகும்.
இது தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் ஏற்படவில்லை. உழவர் சந்தை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் வாகன போக்குவரத்து சீரமைக்க வேண்டியது அவசியமானதாகும். இல்லையெனில், மக்கள் நடமாடும் பகுதியில் உழவர் சந்தையை மாற்றி கொடுக்க வேண்டும்.
 தவறும்பட்சத்தில் உழவர் சந்தையை நம்பியுள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

 

பர்லியார் பழ பண்ணையில் யானைகள் மீண்டும் அட்டகாசம்

குன்னூர்பர்லி யார் அரசு தோட்டக்கலை துறை பழ பண்ணையில் காட்டு யானைகள் நேற்று காலை புகுந்து பழ மரங்கள், நாற்றுகளை சேதப்படுத்தின.
குன்னூர்&மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பர்லியார் அரசு தோட்டக்கலை துறை பழ பண் ணையை ஒட்டிய சாலையில் 4 காட்டு யானைகள் நேற்று காலை 11 மணியளவில் நடமாடி கொண்டிருந்தது.
 பழ பண்ணையின் நுழைவு வாயில் கேட் அடைக்கப்பட்டு இருந்தது. அதனை தனது துதிக்கையால் உடைந்து எறிந்து யானைகள் உள்ளே புகுந்தன. அங்கிருந்த பழ மர கன்றுகள் உள்ளிட்டவற்றை யானைகள் காலால் மிதித்து சேதப்படுத்தின.
மேலும், துதிக்கையால் துரியன், மங்குஸ்தான், பலா உள்ளிட்ட பல்வேறு பழ மரங்களை சூறையாடின. மதியம் ஒரு மணி வரை பழ பண்ணையை விட்டு காட்டு யானைகள் நகரவில்லை. காட்டு யானைகள் ஆவேசத்தால் பழ மரங்கள் மற்றும் மூலிகை நாற்றுகள் சேத மாயின. மேலும் அங்கிருந்த குடிநீர் இணைப்புகளையும் யானைகள் துண்டித்தன.
யானைகளின் ஆவேச த்தை கண்ட ஆண், பெண் தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். யானைகள் நடமாட்டம் காரணமாக மலை பாதையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் யானைகள் தாமாகவே அங்கிருந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

 

 
சென்னை தேனி நீலகிரி பெரம்பலூர் சேலம்
 
காஞ்சிபுரம் விருதுநகர் விழுப்புரம் தஞ்சாவூர் நாமக்கல்
 
திருவள்ளூர் ராமநாதபுரம் கடலூர் நாகை î˜ñ¹K
 
மதுரை கோவை திருச்சி திருநெல்வேலி வேலூர்
 
திண்டுக்கல் கிருஷ்ணகிரி புதுக்கோட்டை தூத்துகுடி திருவண்ணாமலை
 
சிவகங்கை திருப்பூர் கரூர் கன்னியாகுமரி ஈரோடு
 
   
     
     
 
 
 
Copyright 2010 all rights reserved to Kungumam Publications Private Limited
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?