Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Font | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema

இந்தியா  >> போலீஸ் கட்டுப்பாட்டில் கொச்சி தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்

போலீஸ் கட்டுப்பாட்டில் கொச்சி தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்

Swine Flu

திருவனந்தபுரம், : கொச்சியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மத்தி ய உள்துறை எச்சரித்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்துக்குரிய 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கேரளாவில் துறைமுக நகரமான கொச்சியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் & இ & தொய்பா திட்டமிட்டு இருப்பதாகவும், அதை முறியடிக்க பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் கேரள அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை 2 தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கொச்சியில் கமாண்டோ வீரர்கள், போலீசார் உட்பட 2,200 பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

துறைமுகம், விமான நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், உயர் நீதிமன்றம், நட்சத்திர ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் எல்லா இடங்களிலும் கடந்த 2 நாட்களாக இரவுப் பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொச்சி நகரம் முழுவதும் ‘உஷார்நிலை’ பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொச்சிக்கு வரும் எல்லா வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு போலீஸ் நடத்திய சோதனையில் சந்தேகத்துக்குரிய 20 பேர் பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மின்னஞ்சல்
  பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
எழுத்தின் அளவு

<
தொடர்புடையவை
சுரங்க நிறுவனம் மீது சி.பி.ஐ. விசாரணை
2 லட்சம் டன் அரிசி இறக்குமதி
மின்சார ஒயர்கள் உரசி தீ சிரஞ்சீவி உயிர் தப்பினார்
கம்யூனிஸ்டுகளுக்கு பலத்த பின்னடைவு்
நடிகைகளிடம் விரைவில் விசாரணை
Untitled Document
Copyright 2009 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191 Extn:2264
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?