சென்னை, : சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து துறை பஸ்களுக்கு ‘பாடி’ கட்டும் தொழிற்சாலை உள்ளது. இது 1961ம் ஆண்டு 35
ஏக்கரில் தொடங்கப்பட்டது. பஸ்களுக்கு பாடி கட்டுதல், இன்ஜின், கியர்பாக்ஸ் உள்ளிட்டவை மாற்றி அமைக்கும் பணி இங்கு நடக்கிறது.
தொடக்கத்தில் இங்கு 1000 அரசு தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். 10 ஆண்டுக்கு பிறகு தொழிலாளர்களின் எண்ணிக்கை 2000ஆக
உயர்த்தப்பட்டது. தனியார் நிறுவனங்கள் நுழைந்ததால், அரசு தொழிற்சாலைக்கு பாடி கட்ட வர வேண்டிய பஸ்கள் தனியார் நிறுவனங்களுக்கு
சென்றன.
இதனால் அரசு தொழிற்சாலையில் ஆட்கள் எடுப்பது நிறுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளில் அங்கு பணிபுரிந்த 2000 தொழிலாளர்கள் அடுத்தடுத்து
ஓய்வு பெற்றனர். தற்போது 6 ஊழியர்களே உள்ளனர். இவர்களுடன் ஒப்பந்த அடிப்ப டையில் 75 பேர் பணியாற்றுகின்றனர். நிரந்தர
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பென்ஷன் போன்றவை வழங்கவேண்டும் என்பதற்காகவே, தனியார் நிறுவனங்களுக்கு பணி வழங்கப் படுவதாக
கூறப்படுகிறது.
இந்த நிதியாண்டில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பஸ்கள் மத்திய அரசு நிதியின் கீழ் இயக்கப்படுகின்றன. இதில் 900 பஸ்களுக்கு
பாடி கட்டும் பணி பெங்களூர், திருச்சியில் உள்ள தனியார் நிறு வனங்களிடம் வழங்கப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் 100
பஸ்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் 6 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
தொழிலாளி ஒருவர் கூறுகையில், ÔÔஇங்கு போதுமான கருவிகள் கொடுத்து, பஸ் ஒன்றுக்கு பாடி கட்ட ரூ.30,000 ஆகிறது. டெண்டர் விடுவதால் ரூ.20
லட்சம் வரை செலவாகிறது. ஐ.டி.ஐ படித்துவிட்டு லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு இங்கு வேலை தரலாம்ÕÕ என்றார்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ÔÔஆண்டுதோறும் புதிய பஸ்கள் வாங்குவதில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு
புதிய பஸ்களே வாங்கவில்லை. 3 ஆண்டுகளில்தான் 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் வாங்கியுள்ளோம். புதிய பஸ் ஆர்டர் வந்தாலும் 3 மாதத்திலேயே
பணிகள் முடிந்து விடுகின்றன. இதற்காக ஆண்டு முழுவதும் தொழிலாளர்களை வைத்து சம்பளம் வழங்க முடியாது. ஏற்கனவே மாநகர போக்கு
வரத்து கழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தாமல், நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.ÕÕ என்றார்.





