சென்னை : திமுக வக்கீல்கள் ஆலோசனை கூட்டம் பென்னாகரம் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் பணிமனையில் நடந்தது. உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம், சட்டத் துறை இணை செயலாளர் கிரிராஜன் மற்றும் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார். தலைமை தேர்தல் பணி செயலாளர்கள் செல்வகணபதி, வக்கீல் இளங்கோவன், சுகவனம் எம்பி, தலைமை கழக வக்கீல் பரந்தாமன் மற்றும் திமுக வக்கீல்கள் கலந்து கொண்டனர்.





