Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema Make as Homepage
E-paper | Rss Feed | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் No.1 காலை நாளிதழ் Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema
Untitled Document
Rss Feed
Tweeter button
Facebook button
Linkedin button
Digg button
Tweeter button
Youtube button

குற்றம்   >>   முதல் காதலன் கொலை; 2வது காதலன் கைது

முதல் காதலன் கொலை; 2வது காதலன் கைது

Share
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

சென்னை : பெண் போலீசுடனான கள்ளக்காதலை கண்டித்ததால், மின்வாரிய ஊழியரை கொலை செய்து, பிணத்தை அடையாளம் தெரியாமல் எரித்த சம்பவம், சென்னையில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரும்; கைதான கொலையாளியும் அந்த பெண் போலீசின் கள்ளக்காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி நேரு நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). பெருங்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றினார். கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அவரை காணவில்லை. அவரது தாய் செல்லம்மா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஏற்கனவே ராஜேந்திரன் மீது அவரது மனைவி அனிதா கிண்டி மகளிர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். இதற்காக ராஜேந்திரனையும், அவரது மனைவியையும் அழைத்து பேசினர். அதன்பின் ராஜேந்திரனை மர்ம ஆசாமிகள் 6 பேர் மார்ச் 6ம் தேதி தாக்கினர். மாமியார் பாக்கியலட்சுமிதான் ஆள் வைத்து தாக்கியதாக ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.

இந்த பின்னணியில் ராஜேந்திரன் மாயமாகி உள்ளதால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காணாமல் போனாரா, கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது. காணாமல் போனவருக்கும் மனைவிக்கும் இடையே பிரச்னை வர என்ன காரணம் என்ற விசாரணையில், வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக உள்ள சாஸ்திரக்கனி (37) தொடர்பு பற்றி தெரியவந்தது. தகவல் தந்தவர் ராஜேந்திரனின் தாய் செல்லம்மா.

ராஜேந்திரனுடன் சாஸ்திரக்கனிக்கு சிறு வயது முதல் பழக்கம். கனி வீட்டுக்கு ராஜேந்திரன் வந்து செல்வதும், இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றுவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பின்னர் பெண் போலீஸ் சாஸ்திரக்கனியை நோக்கி விசாரணை திரும்பியது. அவரைப் பற்றிய ரகசியத் தகவல்களை சேகரித்தனர். அதில் வீரா என்ற வீரராஜனுடன் தற்போது கனி தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்தனர். அப்படியென்றால் ஏற்கனவே பழகிய ராஜேந்திரன் கதி? அடுத்தகட்ட விசாரணையில் உண்மை தெரிந்தது. சாஸ்திரக்கனியும், வீராவும் பிடிபட்டனர். ராஜேந்திரனை கொன்று, திருவள்ளூரில் உடலை எரித்த விஷயம் வெளியானது.

இதுகுறித்து போலீசில் வீரா அளித்த வாக்குமூலம்:
நான் சாலிகிராமத்தில் வசித்து வருகிறேன். பிகாம் படித்து வந்தேன். முடிக்கவில்லை. விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்தேன். கார் ஓட்டத் தெரியும் என்பதால் இன்ஸ்பெக்டரின் காரை ஓட்டி வந்தேன். இன்ஸ்பெக்டர் வேளச்சேரிக்கு மாறியதும் என்னையும் அழைத்து வந்தார். அப்போதுதான் சாஸ்திரக்கனியுடன் பழக்கம். அடிக்கடி சாஸ்திரக்கனியின் வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருப்போம். அவர் கணவரை விட்டு பிரிந்து வசித்து வந்ததால், எந்த தடையும் இல்லை. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். வீட்டில் அவர் மட்டும்தான் இருப்பார். அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்போம்.

இந்தநிலையில் ஒரு நாடகம் ஆடினேன். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தேன். நான் பொய் சொன்னதை இன்ஸ்பெக்டர் முதல் அனைவரும் நம்பி விட்டனர். ஸ்டேஷனில் எனக்கு பார்ட்டி கொடுத்தனர். அதிலிருந்து சாஸ்திரக்கனிக்கு என் மீது பைத்தியம். எல்லா வகையிலும் என்னை குஷிப்படுத்த ஆரம்பித்தார். ஐபிஎஸ் ஆன பிறகும் என்னை விட்டு விடக் கூடாது என்று கெஞ்சுவார்; கொஞ்சுவார். அந்த சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியாமல் இருந்தேன்.

திடீரென்று ஒருநாள் ராஜேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் கனி. அப்போது, மனைவியுடன் பிரச்னை என்று என்னிடம் அவர் கூறினார். பைக்கில் சென்றபோது 6 பேர் கும்பல் ராஜேந்திரனை தாக்கியது பற்றியும், மாமியார் தான் காரணம் என்றும் புலம்பினார். அதோடு விடாமல், தன்னுடைய வேலையை காலி செய்ய மாமியார் முயற்சிப்பதாக சந்தேகப்பட்டார். மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். நானும் ரூ.2 லட்சம் கொடுத்தால் தஞ்சாவூரில் இருந்து ஆள் வரவழைத்து கொலை செய்யலாம் என்றேன். அவரும் பணம் கொடுத்தார்.

அதுவரைக்கும் கனிக்கும் எனக்கும் இருந்த கள்ளத் தொடர்பு பற்றி அவருக்கு தெரியாது. என்னைப் பற்றி கனி அவரிடம் என்ன சொல்லியிருந்தாள் என்பதும் எனக்கு தெரியாது. ஒரு நாள் அவர் கனி வீட்டுக்கு வந்தபோது, விஷயம் தெரிந்து விட்டது. எனக்கும் சாஸ்திரக்கனிக்கும் கள்ளக்காதல் இருப்பதை அறிந்து அதிர்ந்து போய் விட்டார். ஆனால் என்னைக் கண்டிக்கவில்லை. சாஸ்திரக்கனியை கடுமையாக கண்டித்துள்ளார். என்னிடம் நண்பர் போலவே பழகினார்.

இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மாமியாரை கொல்ல திட்டம் போட்டவர் என்பதால் உஷாரானேன். எப்படியும் என்னை கொலை செய்ய திட்டம் போடுவார் என்று சந்தேகம் வந்தது.  தஞ்சையில் இருந்து என்னுடைய உறவினர்கள் முருகன், வேணுகோபால், சதீஷ் ஆகியோரை வரவழைத்தேன். அவர்களுடன் சென்று ராஜேந்திரனை கடந்த மார்ச் 25ம் தேதி சந்தித்தேன்.

‘‘மாமியாரை கொலை செய்ய ஆட்கள் வந்துள்ளனர். நாம் சென்னையில் இருக்க வேண்டாம். நண்பர்களுடன் திருத்தணி செல்வோம்’’ என்று கூறி காரில் அழைத்துச் சென்றேன். திருத்தணி அருகே எல்லப்பநாயுடு பேட்டை செல்லும் வழியில் காட்டுக்குள் அவரை வெட்டிக் கொலை செய்தோம். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்தோம்.

மறுநாள், காலையில் கருகிய நிலையில் கிடந்த பிணத்தை கனகம்மா சத்திரம் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், அடையாளம் தெரியாத பிணம் என்று முடிவு கட்டியதால், நாங்கள் பயமின்றி இருந்தோம். ஆனால், ராஜேந்திரனின் அம்மா செல்லம்மா, சாஸ்திரக்கனி பற்றிய தகவல்களை சொல்லியதால் தான் சந்தேகம் எங்கள் மீது வந்தது. நாங்கள் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் வீரா கூறியுள்ளார்.

வீரா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரையும் திருவள்ளூருக்கு அழைத்துச் சென்று கொலை நடந்த இடத்தை பார்த்தனர். கொலையை மறைத்ததாக சாஸ்திரக்கனியும் கைது செய்யப்பட்டார்.  கள்ளக்காதல் கொலைக்கு பெண் போலீஸ் காரணமாக இருந்ததும், இறந்தவரும், கொலையாளியும் அந்த பெண் போலீசின் கள்ளக்காதலர்கள் என்பதும், மாமியாரை கொலை செய்ய கொடுத்த பணத்தில், அவரையே கொன்றதும் விசாரணையில் கிடைத்த புதிய தகவல்கள் என்றனர் போலீஸ் அதிகாரிகள்.

அன்று பூவரசி... இன்று சாஸ்திரக்கனி

கள்ளக்காதலால் கொலைகள் நிகழ்வது அதிகரித்து வருகிறது. தண்டையார்பேட்டையில் மஞ்சுளா என்ற ஆசிரியை, பலருடன் தொடர்பு வைத்திருந்ததாக அறிந்த கள்ளக்காதலன் சிவசங்கர், அவரை கொலை செய்தார். காதலன் ஜெயக்குமார் கைகழுவியதால், காதலனின்
4 வயது மகன் ஆதித்யாவை நெரித்து கொன்று சூட்கேசில் போட்டு நாகபட்டினம் பஸ்சில் அனுப்பினாள், பூவரசி என்ற பெண். இப்படி தகாத உறவுகளால் கொலை நடப்பது தொடர்கிறது. தற்போது, பெண் போலீஸ் சாஸ்திரக்கனியின் கள்ளக்காதலும், கொலையில் முடிந்திருக்கிறது.

மேலும் 2 பேருடன் நெருக்கம்

வீராவுக்கு இன்ஸ்பெக்டர் நெருக்கம் என்பதால், அதை வைத்து பல பெண் போலீசாருடன் நெருங்கி பழகியுள்ளார். சாஸ்திரக்கனியைப் போல புறநகரில் பணியில் உள்ள 2 பெண் போலீசாருடன் நெருங்கி பழகியுள்ளார். அவர்கள் இருவரையும் அடிக்கடி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஓசியில் ரூம் கேட்டுள்ளார். கிடைக்காவிட்டால், போனில் இன்ஸ்பெக்டரிடம் கூறுவாராம். அவர் ஓட்டலுக்கு தகவல் தெரிவித்தவுடன் ஓசியில் அறை கிடைக்குமாம். அதில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் அந்த 2 பெண் போலீசாரிடமும் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். சாஸ்திரக்கனியையும் ஊட்டி, கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். போலீஸ் நிலையத்தில் சாதாரண வழக்கு வந்தால், இவரே விசாரித்து, பணம் வாங்கிக் கொண்டு விடுவித்து விடுவாராம்.

மது ‘பார்’ யாருடையது?

வசூல் மன்னனாக திகழ்ந்த வீரா, அதிகாரிகளுக்கு பணம் மட்டுமல்லாது பெண்களையும் சப்ளை செய்துள்ளார். போலீசார் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பதோடு, வீராவுக்கும் சல்யூட் அடித்து வந்தனர். அதில் பெண் போலீசாரும் அடக்கமாம். இவர், வேளச்சேரியில் ஸி 20 லட்சத்துக்கு பார் ஏலத்தில் எடுத்துள்ளார். இதனால் அது போலீஸ் அதிகாரியுடையதா? அல்லது வீராவுடையதுதானா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

காட்டிக் கொடுத்த செல்போன்

ராஜேந்திரனிடம் எப்போதும் 2 செல்போன் இருக்கும். ஒரு செல்போனைத் தொடர்பு கொண்டபோது சைதாப்பேட்டைச் சேர்ந்தவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவர் கீழே கிடந்து எடுத்ததாக தெரிவித்தார். மற்றொரு செல்போன் பயன்படுத்தப்படவில்லை. வேறு சிம்கார்டு போட்டு பேசியது தெரியவந்தது. அந்த போனை வீரா பயன்படுத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இதுதான், வீரா மீது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில், ஒரு செல்போனை சாலையில் வீசியதும், மற்றொரு செல்போனை வீரா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

ஐ.பி.எஸ். மனைவியாக ஆசைப்பட்டதால் வந்த வினை

சென்னை : கணவன், காதலன் கைவிட்டதால் ஐபிஎஸ் வாலிபரை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டேன். அதுவே என்னை சிறைக்கு அனுப்பி விட்டது என்று பெண் போலீஸ் சாஸ்திரக்கனி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சாஸ்திரக்கனி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:

என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். எங்கள் ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஒரே பள்ளியில் படித்தோம். படிக்கும்போதே எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. பல முறை உல்லாசமாக இருந்துள்ளோம். எங்களுடைய காதல் பெற்றோருக்குத் தெரியவந்தது.
அப்போது ராஜேந்திரனுக்கு வேலை கிடைக்காததால், செல்வராஜ் என்பவருடன் 1993ம் ஆண்டு எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவர். 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரனுக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. எனக்காக சென்னைக்கு மாறி வந்தார். நாங்கள் வேளச்சேரி ஒரண்டியம்மன் கோவில் தெருவில் தான் வசித்து வருகிறோம். நானும் அவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். இது என் கணவருக்கு தெரிந்ததால் பிரிந்து சென்று விட்டார்.

நான் வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றினேன். போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த வீரா அறிமுகமானார். அவர், இன்ஸ்பெக்டருக்கு மிகவும் நெருக்கம். நான் வரவேற்பரையில் இருப்பேன். நான் கணவரை விட்டுப் பிரிந்தவள் என்று தெரிந்ததும், என்னுடன் நெருங்கிப் பழகினார். அவருக்குத் திருமணமாகவில்லை. இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தவர் என்பதால், அவரை மடக்கிப் போட்டால் பிரச்னை இருக்காது என்று நினைத்தேன். அதனால் எனக்கு கடினமான டூட்டி கொடுப்பதில்லை.
வீரா அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். இது ராஜேந்திரனுக்குத் தெரிந்து விட்டது. அவர் என்னைக் கண்டித்தார். இதை வீராவிடம் தெரிவித்தேன். ஒருநாள் வீரா, ராஜேந்திரனை கொன்று விட்டதாக தெரிவித்தார். தன்னை ராஜேந்திரன் கொலை செய்வார் என்ற பயத்தில் அவரை கொலை செய்து விட்டதாக சொன்னார். மேலும் இன்ஸ்பெக்டர் தெரிந்தவர் என்பதால், நாமே ராஜேந்திரனின் அம்மாவிடம் சொல்லி காணவில்லை என்று புகார் கொடுப்போம். பின் அந்தப் புகாரை அப்படியே கிடப்பில் போட்டு விடலாம் என்று யோசனை கூறினார்.

இதற்கிடையில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றதாக வீரா சொன்னதும், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. வீரா மீது உள்ள மோகத்தால், கொலையை மறைத்து விட்டேன். பின், ராஜேந்திரனின் அம்மா செல்லம்மாவிடம் சென்று ராஜேந்திரனைக் காணவில்லை என்று புகார் செய்யுங்கள் என்று கூறினேன். நானும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் தைரியத்தில் புகார் செய்ய வைத்தேன். ஆனால் எனக்கும் ராஜேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை செல்லம்மாள் போலீசில் சொல்லியதால் என்னை வடபழனிக்கு மாற்றி விட்டனர். இன்ஸ்பெக்டரும் வேறு பிரச்னையால் மாற்றப்பட்டார். இப்போது நானும், வீராவும் சிக்கினோம்.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் சாஸ்திரக்கனி கூறியுள்ளார்.


சீருடை அணியாத போலீஸ்

வீராவை வேளச்சேரிக்கு அழைத்துச் சென்ற இன்ஸ்பெக்டர் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் அவர் டிரைவர் இல்லாமல் இருந்தபோது வீராதான் டிரைவர். போலீசுக்கு மாமூல், பணி ஒதுக்கீடு என்று அனைத்து பணிகளையும் வீராதான் கவனித்து வந்துள்ளார். தன்னை போலீஸ் என்றே வெளியில் சொல்லிக் கொள்வார். போலீஸ் உடைகளை மட்டும் அணிவதில்லை. ராஜேந்திரன் வசிக்கும் வீடு, கிண்டி போலீஸ் எல்லைக்குள் வருகிறது. ஆனால், சாஸ்திரக்கனிதான், வேளச்சேரி போலீசில் புகார் செய்ய வைத்தார். வீராவும் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, புகாரை விசாரிக்க விடாமல் தடுத்துள்ளார்.

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மின்னஞ்சல்
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பிரதி எடுக்க
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


தொடர்புடையவை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update 20 லட்சம் நகைகள் மீட்பு
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update  பெண்கள் டிவி பார்க்கும் போது வீடுகளில் புகுந்து கொள்ளை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ஆட்டோ டிரைவர் கொலை கள்ளக்காதல் காரணமா?
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update மூதாட்டி சடலம் மணலுடன் வந்தது
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ஓய்வு பெற்ற ஐகோர்ட் ஊழியர் கழுத்து அறுத்துக் கொலை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update திருமணமான 10வது நாளில் புதுப்பெண் தற்கொலை
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update நர்சை கொன்று சாக்கடையில் உடல் புதைப்பு
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update எஸ்.ஐ மகன் உட்பட 3 பேர் கைது
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update கார் கண்ணாடியை உடைத்து 12 லட்சம் ரூபாய் திருட்டு

வாசகர் கருத்துகள்
NESAMANI,chennai 7/30/2010 2:17:10 PM

worst department in Tamilnadu. Police dept.

s,Chennai 7/30/2010 12:36:48 PM

Good progress.. Equality.. Men having many sights so will the ladies..So take care of ur wifes

ramu,chennai 7/30/2010 11:43:39 AM

அரசு ஊழியர்கள் வக்கீல்கள்,ஜட்ஜ் கள் , ஆசிரியர்கள் காவல் துறை ஆகியொர் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்களுக்கு குறை ந்த ப்ட்ஷம் ஆயுள் தண்டனை வழஙக வேண்டும் நீதி தேவதை யின் கண்கள் அப்போது தான் திறக்கப் படும் ஜன நாயக நாட்டில் எல்லோருகும் ஒரே சட்டம் என்ப்து கேலிக் கூத்து. அதிகாரதை கைகளில் வைத்து இருக்கும் இவர்க்ளுக்கு குறைந்த பட்ஷ தன்டணையக ஆயுள் தண்டனை ஆளிக்க பட வேண்டும் ராமு

Ariva,Abu Dhabi 7/30/2010 10:15:41 AM

புதுசா இருக்கு...... புதுசால்லாம் இல்ல...... பழசுலெருந்தே அப்படித்தான்......

Ariva,Abu Dhabi 7/30/2010 10:07:53 AM

புதுசா இருக்கு...... புதுசால்லாம் இல்ல...... பழசுலெருந்தே அப்படித்தான்......

RAJKUMAR,ABUDHABI 7/30/2010 10:02:05 AM

அவங்க எல்லாரும் எதார்த்தமா கேட்டதும் இவங்க பதார்த்தமா கொடுத்துட்டாங்க.............

s.m.raja,cbe 7/30/2010 8:53:33 AM

பெண்கள் நல்ல முன்ணேற்றம்

jayarajan v,chennai 7/30/2010 6:00:06 AM

காவல் துரையின் மொசமான நிலையை இது காட்டுகிரது

JEMINIVIVEK.K,SINGAPORE 7/30/2010 3:56:56 AM

very bad news


     
 
 
 
Copyright 2010 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?