SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாவல்பழ அல்வா

2017-08-11@ 14:08:03

என்னென்ன தேவை?

நாவல் பழம் - 2 கப்
கோதுமை பிரெட் - 2
நாட்டுச் சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உடைத்த பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பாதாம் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - தேவையான அளவு   


எப்படிச் செய்வது?

முதலில் பாதாம், முந்திரியைத் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு கப் நாவல் பழத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு நாவல்பழச்சாற்றில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் மீதமுள்ள நாவல்பழத்தைச் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் ஊறவைத்த பிரெட் விழுது, சிறிதளவு நெய்விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கிளறவும். பிறகு, ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது பால் பவுடர் சேர்த்து கிளறி இறக்கவும். மேலே பாதாம் துருவலைத் தூவவும். சுவையான நாவல்பழ அல்வா ரெடி!!!

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்