SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேசர் மினி ரசமலாய்

2017-06-19@ 14:45:51

என்னென்ன தேவை?

சர்க்கரை - 4 கப்,
பனீர் - 1 கப்,
பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1/4 கப்,
குங்குமப்பூ - சிறிது,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

சிறிது பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊறவைக்கவும். அடிகனமான  ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, சர்க்கரை 1/4 கப் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்து பாதியாக வந்ததும், மிதமான தீயில் வைத்து ஊறிய குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் பாலை சேர்த்து இறக்கவும். பனீரை நன்றாக உதிர்த்து விரல் நுனிகளில் மிருதுவாக தேய்த்து பிசைந்து சிறு சிறு தட்டைகளாக அல்லது கோலி உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

பாத்திரத்தில் 4 கப் சர்க்கரை, 2 கப் தண்ணீர் சேர்த்து தளதளவென்று கொதிக்க வைத்து செய்த பனீர் தட்டைகளை போட்டு 10 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பரிமாறும்போது கிண்ணத்தில் 2 பனீர் தட்டைகளை போட்டு அதன் மேல் கெட்டியான பால் கலவை 1/2 கப் அளவு ஊற்றி, சிறிது குங்குமப்பூவால் அலங்கரிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்