SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டாஞ்சோறு

2020-02-20@ 17:41:33

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 2 கப்,
துவரம் பருப்பு - அரை கப்,
கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை - தலா 1,
வாழைக்காய் - பாதியளவு,
முருங்கைக்கீரை, அரைக் கீரை, முளைக் கீரை - தலா 2 கைப்பிடி,
சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் - தலா 8,
பூண்டு - 6 பல்,
கடுகு, உளுந்து, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
வடகம் - 3 துண்டு,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள். அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளிக் கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து, வடகத்தைப் பொரித்தெடுங்கள். இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்