SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோயா ரைஸ்

2019-10-14@ 17:56:55

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
மீல்மேக்கர் - 1/2 கப்,
காய்ந்தமிளகாய் - 3,
கரம்மசாலாத்தூள்,
எலுமிச்சைச்சாறு - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க...

பட்டை - சிறிய துண்டு,
லவங்கம் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்,
கொத்தமல்லித்தழை,
வட்டமாக நறுக்கிய தக்காளி,
டொமேட்டோ சாஸ் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். காய்ந்தமிளகாயை, 1/2 கப் வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்து, அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு பொரித்த மீல்மேக்கர், கரம்மசாலாத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி, அதன் மீது டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளியால் அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-11-2019

    12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • americaship

    ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

  • traincrashtelungana

    தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

  • humanfacefish

    மனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

  • berlinwall

    ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்