SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீட்பால் வெஜ் சூப்

2018-11-13@ 17:12:12

என்னென்ன தேவை?

மீட்பால் செய்ய...

மட்டன் பீஸ் - 50 கிராம்,
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, பப்பாளிக்காய் விழுது - தலா 1/4 டீஸ்பூன்,
முட்டை - 1,
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்,
பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

சூப் செய்ய...

பீன்ஸ் - 10,
கேரட் - 1/2 துண்டு,
காலிஃப்ளவர் - 1/4 துண்டு,
வெஜிடபிள் ஸ்டாக் - 5 கப்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு,
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.


எப்படிச் செய்வது?

மீட்பால் செய்ய கொடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக செய்யவும். காய்கறிகளை மீடியம் சைஸ்  துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி வெஜிடபிள் ஸ்டாக், காய்கறிகள்,  உப்பு, மிளகுத்தூள், மட்டன் உருண்டைகளையும் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி ஸ்பிரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்