மசூர் பருப்பு சுண்டல்
2018-09-20@ 14:41:52

என்னென்ன தேவை?
மசூர் பருப்பு - 1 கப்,
பெருங்காயத்தூள் - சிறிது,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 சிட்டிகை,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
மசாலா பொடிக்கு...
பட்டை - சிறிது, கிராம்பு - 2,
தனியா - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 1.
எப்படிச் செய்வது?
மசாலா பொடிக்கு கொடுத்ததை மிக்சியில் அரைத்து கொள்ளவும். மசூர் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, மலர வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மிளகுத்தூள், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி, சர்க்கரை, உப்பு, வெந்த பருப்பு, மஞ்சள் தூள், மசாலா பொடியை போட்டு ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கும்படி கிளறி பரிமாறவும்.