SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைக்காய் மசாலா

2018-09-06@ 15:27:46

என்னென்ன தேவை:

வாழைக்காய் (பெரியது) - 1
பல்லாரி - 1
தக்காளி - 1
தேங்காய் - ஒரு துண்டு
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2


எப்படிச் செய்வது:

வாழைக்காயை துண்டுகளாக்கி தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் தேங்காய், பெருஞ்சீரகம், ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மீதமுள்ள பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பல்லாரி, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். பின் ஊற வைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும். கலவையாக வரும்போது, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து இறக்கவும்.
சாம்பார், ரசம் சேர்த்து தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்