SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய்ப்பால் தோசை

2018-04-16@ 15:25:46

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1½ கப்,
சில்லிஃப்ளேக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
துருவிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்,
மெல்லியதாக நறுக்கிய கோஸ் - 4 டேபிள்ஸ்பூன்,
சீரகம், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து சீரகம், பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், கோஸ், கேரட் துருவல், இஞ்சி, பூண்டு விழுது வதக்கி, சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து இறக்கவும். பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, தேங்காய்ப்பால், தேவையானால் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி, மேலே 3 டீஸ்பூன் மசாலாவை வைத்து மூடி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்