SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்காளி சாதம்

2018-04-12@ 11:57:03

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
காய்ந்தமிளகாய் - 3,
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு,
வறுத்துப் பொடித்த வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க கொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலைகள்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் காய்ந்த மிளகாயை வதக்கி, பின்பு தக்காளியை சேர்த்து வதக்கி ஆறவைத்து, புளி, உப்புடன் சேர்த்து மிக்சியில் விழுதாக  அரைக்கவும். மற்றொரு கடாயில் தாளிக்க  கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரியும்போது வெந்தயப்பொடி, சாதம் சேர்த்து நன்கு கலந்து, கொத்தமல்லித்தழை, வேர்க்கடலையை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்