SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உருளைக்கிழங்கு தேங்காய் மசாலா கிரேவி

2018-02-27@ 11:01:01

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 3,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
கெட்டியான புளிக்கரைசல் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க...

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4,
தனியா - 3 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய்,
கடுகு - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 1,
கறிவேப்பிலை - 1 கொத்து.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து மிக்சியில் அரைத்து, அத்துடன் தேங்காய்த்துருவல், புளிக்கரைசல் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு, 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மசாலா சேர்ந்து வந்ததும் சப்பாத்தி, பூரி, இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்