SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார்லி கம்புச் சுண்டல்

2018-02-19@ 11:00:19

என்னென்ன தேவை?

பார்லி - 1 கப்,
கம்பு - 1/4 கப்,
உப்பு, எண்ணெய் - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
நெய் - சிறிது.
நெய்யில் வறுத்து பொடித்த பாதாம் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி பொடி - 1 டீஸ்பூன்.

வறுத்து பொடிக்க...

தனியா - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் தனியா, காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பை வறுத்து பொடித்து கொள்ளவும். பார்லியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். கம்பை ஊறவைத்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த பார்லி, கம்பு, உப்பு, பொடித்த மசாலாப்பொடி, பாதாம் பொடி, முந்திரிப்பொடி சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்