SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூங்கில் அரிசி காய்கறி தோசை

2018-02-12@ 14:14:03

என்னென்ன தேவை?

மூங்கில் அரிசி - 1 குவளை,
உளுந்து - 1/5 குவளை,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 25 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
கேரட் - 25 கிராம்,
குடைமிளகாய் - 25 கிராம்,
வத்தல் பொடி - 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
கரம்மசாலா பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மூங்கில் அரிசியை தனியாகவும், உளுந்துடன்வெந்தயம் சேர்த்து தனியாக ஊற வைக்கவும். ஊறியதும் இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் தோசை  மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, கேரட், குடைமிளகாய் வதக்கி மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், வத்தல் பொடி, சிறிது உப்பு சேர்த்து கலந்து வதங்கியதும் இறக்கவும். சூடான தோசைக்கல்லில் மூங்கில் அரிசி மாவை தோசையாக வார்த்து, அதன் மீது வதக்கிய மசாலாவை பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்