SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஞ்சி சாதம்

2018-01-24@ 14:10:39

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப்பழம் அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 6,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5  இலைகள்.


எப்படிச் செய்வது?

மிக்சியில் இஞ்சி, புளி, மஞ்சள் தூள், காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்பு சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

  • metrorayil_train11

    டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

  • northkores_minesexplodes1

    அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

  • 25-05-2018

    25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்