SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடைகறி

2018-01-24@ 12:24:51

என்னென்ன தேவை?

பருப்பு வடை - 3 
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய தக்காளி - ஒன்றரை
பட்டை - சிறிய துண்டு  
அன்னாசி மொக்கு - 2  
பிரியாணி இலை - ஒன்று
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  
இஞ்சி - பூண்டு விழுது  
மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா 2 டீஸ்பூன்  
தேங்காய்ப்பால் - 4 டேபிள்ஸ்பூன்  
கறிவேப்பிலை - சிறிதளவு  
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  
உப்பு - ஒரு டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு வடைத் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்