SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் கொழுக்கட்டை

2018-01-10@ 12:17:07

என்னென்ன தேவை?

அரிசி மாவு, தேங்காய்த்துருவல் - தலா 1 கப்,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
துருவிய வெல்லம் - 3/4 கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கொதித்ததும் அரிசி மாவை தூவி, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி மாவு வெந்ததும் இறக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீரில், வெல்லத்துருவல் போட்டு ஒரு கொதி வந்ததும் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி போட்டுக் கிளறி கையில் உருட்டும் பதம் வந்ததும் இறக்கவும்.

பூரணம் தயார். வெந்த அரிசி மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சொப்பு மாதிரி செய்து, 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்