SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக்ஸ்டு வெஜிடபிள் ஸ்டூ

2018-01-04@ 14:36:32

என்னென்ன தேவை?

நறுக்கிய நூல்கோல், கேரட், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - தலா 1, நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 3, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் -
1/2 கப்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, காய்ந்தமிளகாய் - 6, தனியா - 1 டேபிள்ஸ்பூன், சீரகம், மஞ்சள் தூள், கசகசா - தலா 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், நூல்கோல், கேரட், குடைமிளகாயை வதக்கி, உப்பு, தக்காளி விழுது, 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி நுரை தட்டியதும் இறக்கவும். சப்பாத்தி, நாண், தோசையுடன் சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்