SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபிஷ் பெப்பர் மசாலா

2017-12-05@ 12:46:41

என்னென்ன தேவை?

நெய் மீன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 3,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
முதல் தேங்காய்ப்பால் - 1 கப்,
கோகம் புளி - 2 துண்டுகள்,
உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், மிளகு, தனியாத்தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன், அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கோகம் புளியை போட்டு அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க விடவும். கிரேவி திக்காக வரும்வரை கொதிக்கவிட்டு, தேங்காய்ப்பால், கறிவேப்பிலையும் சேர்த்து சிம்மில் வேக விடவும். நன்கு கொதித்து மீன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்