SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெட் சாண்ட்விச்

2017-12-05@ 12:44:20

என்னென்ன தேவை?
 
பிரெட் ஸ்லைஸ் - 10,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 4,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பட்டை, கிராம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு பட்டை, கிராம்புத்தூள் போட்டு வெடிக்க விட்டு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி இறக்கவும். பிரெட் ஸ்லைஸ் நடுவில் மசாலாவை வைத்து பிரெட் டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும் அல்லது தோசைக்கல்லில் இரண்டு பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து, நடுவில் மசாலாவை வைத்து சாண்ட்விச் செய்து கெட்ச்சப் அல்லது சாஸுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்