SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெங்காய தக்காளி தொக்கு

2017-11-24@ 11:29:00

என்னென்ன தேவை?

பழுத்த நாட்டுத் தக்காளி - 5,
பெரிய வெங்காயம் - 2,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
இடித்த பூண்டு - 5 பல்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்.

தாளிக்க...

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

மிக்சியில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, தனியாத்தூள், மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கி, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து சுண்டி வரும்வரை வதக்கி, கறிவேப்பிலையை தூவி இறக்கவும். சப்பாத்தி, தோசை, இட்லி, தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தண்ணீர் சேர்த்து தொக்கு செய்தால் கெட்டு விடும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்